சினிமா

ஓடிடியில் ரீலிசாகும் தி லெஜண்ட்.. எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா?

தமிழ்நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம், தி லெஜென் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் அதிபரான சரவணன் அருள் ஆரம்பத்தில் அவருடைய கடைக்கு எடுக்கப்பட்ட விளம்பரங்களில் அவரே நடித்து வந்தார். அதை பலரும் பல வகையில் விமர்சித்து வந்தார்கள்.

Advertisement

அவரை ட்ரோல் செய்வதற்கு மீமாகள் உருவாக்கப்பட்டது. ஆனால் அது எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. தன்னுடைய முயற்சியில் அவர் என்றும் விலகாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து இவருடைய கூடுதல் முயற்சி ஆக மேலும் ஒரு படி சென்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு போட்டியிட களம் இறங்கி தானே ப்ரொடியூஸ் செய்து அதில் தானே கதாநாயகனாகவும் நடிக்க முடிவு செய்து பின் அதை நடத்தியும் காட்டினார்.

தல அஜித் நடித்த உல்லாசம் திரைப்படத்தையும், நடிகர் விக்ரமாதித்யா நடித்த விசில் திரைப்படத்தையும் இயக்கிய இரட்டை இயக்குனர்களாகிய ஜேடி அண்ட் ஜெர்ரி ஆகியோர்தான் தி லேஜண்ட் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் உடைய இசையில் வெளியான லெஜன்ட் திரைப்படத்தின் உடைய பாடல்கள் ரசிகர்களிடம் சற்று நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்தத் திரைப்படத்தில் சரவணன் அருளுடன் இணைந்து கீர்த்திகா திவாரி,ஊர்வசி ரூட்லா, சுமன், நாசர் மேலும் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகரான மறைந்த நடிகர் விவேக்கும் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.சுமார் 60 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த லெஜன்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இரண்டு கோடி ரூபாய் வசூலை பெற்றது . ஆனால் ஒட்டு மொத்தமாக இந்த திரைப்படத்திற்கு வெறும் ஆறு கோடியே வசூல் ஆனது. இந்த திரைப்படம்  தோல்வியை தழுவியது.

எப்பொழுதெல்லாம் திரையரங்குகளில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுமே விரைவில் OTT வெளியிடப்பட்டு வருகிறது. அந்த நிலையில் ரசிகர்கள் பலர் இந்த லெஜன்ட் திரைப்படத்தை ஓ டி டி இல் வெளியிடுமாறு கோரிக்கை இட்டு வந்தார்கள். அதில் பார்த்து ரசிக்கலாம் என்று ஆர்வம் கொண்டு எத்தனையோ ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் சரவணன் அருள் ஒட்டிட்டியில் தருவதற்கு மறுத்துவிட்டார்.

இப்படி பெரும் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது ஒரு நற்செய்தியை தந்திருக்கிறார். விரைவில் இந்த திரைப்படத்தை disney+ hotstar-ல் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் மீண்டும் புத்துணர்ச்சி அடைந்து திரைப்படத்தை காண காத்திருக்கிறார்கள்.
தோல்விகளைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாத திரைப்படத்தின் கதாநாயகனான சரவணன் மீண்டும் கதாநாயகராக பல படங்களில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top