Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினி படத்திற்கே கண்டிஷன் போட்ட இளம் இயக்குனர்! கமல் கொடுத்த இடம்தான் காரணமா?

ரஜினி படத்திற்கே கண்டிஷன் போட்ட இளம் இயக்குனர்! கமல் கொடுத்த இடம்தான் காரணமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் லோகேஷ் கனகராஜ் . மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் என நான்கு மெகா ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது தளபதி விஜய் வைத்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் லியோ திரைப்படத்தை எடுத்து வருகிறார் . இத்திரைப்படத்திற்கு ஆள் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . லியோ திரைப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது . இதற்கான அறிவிப்புக்காகவும் சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் .

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . கமல்ஹாசன் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படம் கடந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் எட்ட முடியாத உயரத்திற்கு சென்று விட்டது என்று கூறலாம் . தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இயக்குனர்களில் மிகவும் பிசியாக இருப்பவரும் இவரே . இவரது கால் சீட்டுக்காக முன்னணி ஹீரோக்களை காத்திருக்கின்றனர் என்றால் அது மறுக்க முடியாது .

சூப்பர் ஸ்டாரின் 171 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன . மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது . லியோ திரைப்படத்தின் சூட்டிங் இருக்கு பிறகு படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது . இந்தத் திரைப்படத்திற்காக லோகேஷ் போட்டோ கண்டிஷன் ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது . எனினும் சூப்பர் ஸ்டார் விடாப்பிடியாக லோகேஷ் உடன் இணைந்து பணியாற்ற வரும்போது வேறு வழி இல்லாமல் இயக்குனரின் கண்டிஷனுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

- Advertisement -

இந்தத் திரைப்படத்தை இயக்குவதற்கு சம்பளமாக 40 கோடி ரூபாய் வரை கேட்டிருக்கிறார் லோகேஷ் . இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ் பதிலாக வேறு இயக்குனர்களை வைத்து படத்தை இயக்கலாம் என முடிவு செய்திருக்கிறது ஆனால் சூப்பர் ஸ்டார் ஓட படியாக லோகேஷ் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார் . மேலும் சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்திலிருந்து உலகம் பட்சத்தில் ராஜ்கமல் நிறுவனமும் இந்தப் படத்தை தயாரிக்க தயாராக இருப்பதால் வேறு வழி இல்லாமல் லோகேஷ் கேட்டனர் புது கோடி ரூபாய்க்கு சம்மதம் தெரிவித்திருக்கிறது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் .

- Advertisement -

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் தலைக்கனத்துடன் சுற்றி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் விக்ரம் படத்தின் வெற்றியால் வந்த தைரியம் தான் என்றும் கமல்ஹாசன் அவருக்கு கொடுத்திருக்கும் இடம் தான் இதற்கெல்லாம் காரணம் எனவும் ஜீவா ரசிகர்கள் புலம்பி வருகின்றனர் . தற்போது அவர் இயக்கி வரும் லியோ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் லோகேஷ் கனகராஜன் மார்க்கெட் எட்ட முடியாத உயரத்திற்கு சென்று விடும்

Most Popular