Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமா“விஜய் அண்ணாவை காப்பாற்றுவது போல் ஒரு காட்சி இருந்தது ” - மாஸ்டர் படத்தின் தனது...

“விஜய் அண்ணாவை காப்பாற்றுவது போல் ஒரு காட்சி இருந்தது ” – மாஸ்டர் படத்தின் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் நடிகர் சாந்தனு

வேட்டியை மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் துறைகளில் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளியான சக்கரகட்டி மற்றும் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படங்கள் இவரைப் பற்றி நாம் அனைவரையும் பேச வைக்கும் திரைப்படங்கள் ஆகும்..

- Advertisement -

ஒரு பிரபலமான நடிகரின் ஆதரவையும், முன்னணி நடிகராக வெற்றிகரமான அறிமுகத்தையும் பெற்றிருந்தாலும், சாந்தனுவால் தமிழ் சினிமாவில் தனது தந்தைக்கு சமமான வெற்றியை அடைய முடியவில்லை. இருப்பினும், அவர் தொடர்ந்து கடினமாக உழைத்து, பல ஆண்டுகளாக பல படங்களில் நடித்தார்.

இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மகிந்தரன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் ஆகியோர் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் அவரது மிகச் சமீபத்திய மற்றும் உயர்வான பாத்திரங்களில் ஒன்றாகும். . ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

- Advertisement -

மாஸ்டர் படத்தில் நடித்தது குறித்து நடிகர் சாந்தனு கூறும்போது ” விஜய் அண்ணா திரைப்படத்தில் நடித்தால் வாழ்க்கையே மாறும் என்ற நம்பிக்கையில் நடிக்க ஒப்பந்தமானேன். ஆனால் படம் வெளியான பிறகு எனக்கு அவமானம் மட்டுமே கிடைத்தது. தன்னுடைய காட்சிகள் மட்டுமே 40 நிமிடங்கள் வரும் என்று கூடிய படக்குழு, என்னை ஒரு மாத காலம் படப்பிடிப்பிற்கு அழைத்து என்னுடைய காட்சிகளை பதிவு செய்து என்னுடைய முக்கியமான காட்சிகள் அனைத்தையும் படத்தில் இருந்து நீக்கி விட்டார்கள்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் அவர் கூறும்போது ” மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் நான் பல கேலி கூத்துகளுக்கு ஆளானேன். என்னுடைய காட்சிகளில் சண்டை மற்றும் பாடலும் இடம் பெற்றது ஆனால் அந்த காட்சிகள் யாவும் திரையில் காட்டப்படவில்லை. ஒரு காட்சியில் விஜய் அண்ணாவை நான் காப்பாற்றுவது போல் எடுத்தார்கள் அந்த காட்சியே என்னை படத்திற்குள் மீண்டும் கூடியது போல் இருந்தது ஆனால் அந்த காட்சி நீக்கிவிட்டார்கள். எனக்கு இது மிகவும் வேதனை அளித்தது. நானே எதிர்பாக்காதில் என்னிடம் எதுவும் கூறாமல் கடவுளின் என்னுடைய காட்சியில நீக்கி விட்டார்கள் ” என்று தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினார் நடிகர் சந்தானு.

மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் 250 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கமும் அதிக அளவில் பேசப்பட்டது இந்த நிலையில் நடிகர் சாந்தனு இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Most Popular