Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாநான் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை - இயக்குனர் சீனு ராமசாமி...

நான் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை – இயக்குனர் சீனு ராமசாமி அதிரடி பேட்டி

தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் தான் சீனு ராமசாமி. இவர் கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்கடுத்து அவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்திற்கு தேசிய விருது வென்றார். இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் கிராமத்து மண்வாசம் மாறாமல் அப்படியே இருக்கும் என்பதை ஒரு சிறப்பான விஷயம் ஆகும். இவர் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மட்டும் நான்கு படங்கள் இயங்கியுள்ளார் அந்த நான்கு படங்களும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கடைசியாக வெளியான மாமனிதன் திரைப்படம் திரையரங்குகளில் சரிவர ஓடாததால் ஓரிரு நாட்களிலே அந்த படம் ஓ. டி. டி யில் வெளியானது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 20 முதல் 27ஆம் தேதி வரை மாஸ்கோவில் நடைபெறும் திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் திரையிடப்படுகிறது.

இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் இப்படத்தின் மதிப்புமிக்க தேர்வுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.விழாவில் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி
“நடிகர் ராஜேஷ் எனது வழிகாட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் படம் ரஷ்யா சென்றது போல், மாமனிதன் படம் ரஷ்யா செல்கிறது. நான் சினிமாவுக்கு வந்த நோக்கம் இப்போது நிறைவேறி வருகிறது. வரலாற்றுப் பெருமை மிக்க ரஷ்யாவில் மாமனிதன் திரையிடப் போவது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.நான் ரஷ்யா செல்லவில்லை,மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறது. என் நாட்டுக் கோழியும், மனிதாபிமானமும், கலாச்சாரமும் அங்கே போகிறது” என்று பெருமையாக கூறினார்.

- Advertisement -

மேலும் அவர் பேசும்போது “பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களே பெரும் கவலையாக உள்ளது.இந்த ஒரு குழந்தை தற்போது உலக ஒலிம்பிக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது, ஆனால் தற்போதும் இந்த படத்தை யாரும் கொண்டாடவில்லை.
சேதுபதியின் நடிப்பு உலகம் முழுவதும் தெரிய வேண்டும் என்பதற்காக மாமனிதன் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 650 முறை திரையிடப்பட்டுள்ளது. ஆஹா ஓ. டி. டி தளத்தின் மூலம் 51 கோடி வசூலித்துள்ளது மாமனிதன். பொது ஊடகங்களில் வெற்றி பெற முடியாத ஒரு படம் ஓ.டி.டி இல் வெற்றி பெற்றுள்ளது. இனி விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர வாய்ப்பு இல்லை. 12 வருடங்களில் விஜய் சேதுபதியை வைத்து நான்கு படங்கள் இயக்கியுள்ளேன். நான் இறந்தாலும் இந்தப் படங்கள் பேசும், நான் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை ” என்று கூறினார்.

- Advertisement -

இயக்குனர் சீனு ராமசாமி இவ்வாறு கூறியிருப்பது தமிழ் திரையுலகில் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Most Popular