Thursday, May 16, 2024
- Advertisement -
Homeசினிமாகாவாலா பாடல் இடம் பெற இது தான் காரணமா..! ஜெயிலர் தமன்னா கதாபாத்திரம் பற்றிய லேட்டஸ்ட்...

காவாலா பாடல் இடம் பெற இது தான் காரணமா..! ஜெயிலர் தமன்னா கதாபாத்திரம் பற்றிய லேட்டஸ்ட் அறிவிப்பு.. !

இயக்குனர் நெல்சன் தலைமையில் மிகப் பெரிய பட்டாளதூடன் தயாராகியுள்ள திரைப்படம் ஜெயிலர். முதலில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த், யோகி பாபு எனத் துவங்கிய படக்குழு நாள் போக்கில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா என பெரிய குழுவைச் சேர்த்து.

- Advertisement -

ஒன்றரை வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது. அதை கொண்டாடி புகைப்படங்களையும் வெளியிட்டனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது நெல்சன் & கோ.

இசை வெளியீட்டு விழா

இதுவரை ஜெயிலர் படத்தைச் சேர்ந்த மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையில் மூன்றுமே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் புரொமோஷனின் அடுத்தக் கட்டமாக பிரம்மாண்டமான இசைவெளியீட்டு விழா நேரு அரங்கில் இன்று நடைபெறுகிறது. இதில் மீதமுள்ள பாடல்களை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

ஜெயிலரில் தமன்னா கதாபாத்திரம்

ஜெயிலர் படத்தில் தமன்னா தான் ஹீரோயின் என்ற வதந்திகள் முதலில் பரவின. உண்மையில் தமன்னாவின் கதாபாத்திரம் என்னவென்ற செய்தி தற்போது கிடைத்துள்ளது. ஜெயிலர் படத்தில் அவர் தெலுங்கு நடிகையாக வருகிறாராம். அதனால் தான் காவாலா பாட்டில் தெலுங்கு சொற்களை சேர்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் தமன்னாவின் கதாபாத்திரம் குறைந்த நேரமே படத்தில் இடம் பெற்றுள்ளது.

- Advertisement -

மேலும் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் தான் வருகிறாராம். ரஜினிக்கு வில்லனாக சிவராஜ் குமார் மோதுகிறார். ஆக்ஷன் திரைப்படமான ஜெயிலர் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஆகும். இது சற்று பயத்தை உண்டாக்கியுள்ளது. பெரும்பாலான நீண்ட நேரம் கொண்ட திரைப்படம் கடந்த ஒரு வருடமாக அடி வாங்கியே வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் சொதப்பியதால் இயக்குனர் நெல்சனின் மேல் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் சூப்பர்ஸ்டார் படத்தில் பெரிய நடிகர்களை வைத்து இயக்குவதால் சற்று சரிந்தாலும் சென்ற முறையை விட பயங்கரமாக கலாய்த்து தள்ளிவிடுவர். அதன் காரணமாக நெல்சன் தூங்கமால் எல்லாம் பணியாற்றியுள்ளதாக செய்திகள் வந்தன.

Most Popular