Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்த வாரம் ஓ டி டி யிலும் , திரையரங்கிலும் இத்தனை திரைப்படங்கள் வெளியிடப்பட இருக்கிறதா..?...

இந்த வாரம் ஓ டி டி யிலும் , திரையரங்கிலும் இத்தனை திரைப்படங்கள் வெளியிடப்பட இருக்கிறதா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

கடந்த வாரம் திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் நடித்த லால் சலாம் திரைப்படமும், மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது .

- Advertisement -

லால் சலாம் திரைப்படத்தின் மீது ஏற்பட்ட சர்ச்சையால் அத்திரைப்படத்திற்கு யாரும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் கடந்த வாரம் பெருமளவில் சொல்லிக் கொள்ள எந்த திரைப்படமும் வெளியிடப்படவில்லை என்றே சொல்லலாம்.

இதைத்தொடர்ந்து இந்த வாரம் திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி நடித்த “சைரன்” திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியிடப்பட்டிருக்கிறது .ஓரளவு நல்ல விமர்சனங்களையும் பெற்று இருக்கிறது . மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் “பிரம்மயுகம் “திரைப்படமும்    பிஜிமேனன் நடிக்கும் “துண்டு” திரைப்படமும் தெலுங்கில் சுதீப் கிஷன் நடிக்கும் “ஊர் பெயர் பைரவ கோனார்” என்ற திரைப்படமும் மேலும் ஹாலிவுட் “மேடம் வெப்” என்ற திரைப்படமும் வெளியிடப்பட உள்ளது.

- Advertisement -

அதேபோல் இந்த வாரம் ஓட்டுத்திகளில் வெளியிடப்படும் இருக்கும் திரைப்படங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

“பாமாகலாபம் 2 “என்ற திரைப்படம் நடிகை பிரியாமணி நடிப்பில் இன்று ஆகா என்ற ஓடிடியில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து”Player “,”This is  me now love story” என்ற திரைப்படங்களும் ஹாலிவுட் வெளிவர இருக்கிறது நாளை அமேசான் பிரைமில் இந்த இரண்டு ஹாலிவுட் திரைப்படங்களும் வெளியிடப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு பிப்ரவரி 14-ஆம் தேதியான காதலர் தினத்தை முன்னிட்டு அசோக் செல்வன் நடித்த “சபாநாயகன் “நடிகர் ஷாருக்கான் நடித்த “டாங்கி” ஆகிய திரைப்படங்கள் netflixல் வெளியிடப்பட்டது மீரா ஜாஸ்மின் நடித்த” குயின் எலிசபெத்” ஜீ5 ஓடிடியில் வெளியிடப்பட்டது ஜித்தன் ரமேஷ் நடித்த” ரூட் நம்பர் 17 “அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டிருக்கிறது.

Most Popular