Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்த வாரம் ஓ டி டி ரிலீஸ் வருடத்தின் முதல் வாரமே இப்படியா?

இந்த வாரம் ஓ டி டி ரிலீஸ் வருடத்தின் முதல் வாரமே இப்படியா?

2023இல் கடந்து நாம் 2024 அடி எடுத்து வைத்திருக்கிறோம். வருடம் தொடங்கிய முதல் வாரத்திலேயே நம்மை மகிழ்விக்க ஓ டி டியில் சில திரைப்படங்கள் வெளியிடப்பட இருக்கிறது.

- Advertisement -

அதுவும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் தான் இந்த வாரம் ஓடிடியில் வெளிவர இருக்கிறது.

வருகின்ற 4ம் தேதி நெட் ஃப்லிக்ஸ் என்ற ஓ டி டியில் தெலுங்கில் வெளிவந்த ஹாய் நானா என்று திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி கதாநாயகராக நடித்து இருக்கிறார் .

- Advertisement -

மேலும் இத்திரைப்படத்தில் சீதாராமன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை மெர்னால் தாகூர் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இந்தத் திரைப்படம் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் 72 கோடி ரூபாய் என வசூல் ரீதியாகவும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இந்த மாதம் 5ம் தேதி காஞ்சூரிங் கண்ணப்பா என்ற திரைப்படம் நெட் ஃப்லிக்ஸ் என்ற ஓ டி டி இல் வெளியிடப்பட இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .

இது ஒரு ஹாரர் காமெடி திரைப்படம் ஆகும். ரெஜினா கசன்டறா, ஆனந்த்ராஜ், நாசர் ,சரண்யா பொன்வண்ணன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட்டது. இந்தத் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

மேலும் ஹிந்தியில் வெளிவந்த தேஜாஸ் என்ற திரைப்படம் வருகின்ற 5ம் தேதி ஜீ5 என்ற ஓடிடியில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை கங்கணா ராணாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Most Popular