Thursday, May 2, 2024
- Advertisement -
HomeசினிமாThug Life அப்டேட்ஸ் உலக நாயகனின் தக் லைப் ஷூட்டிங் எப்போ தெரியுமா?

Thug Life அப்டேட்ஸ் உலக நாயகனின் தக் லைப் ஷூட்டிங் எப்போ தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் உள்ள படப்பிடித்தல் பிஸியாக இருக்கிறார். இன்னும் சில நாட்களிலும் சில மாதங்களிலும் இந்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து நடிகர் கமல் நடிக்க இருக்கின்ற அடுத்த திரைப்படத்தைப் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் கமல் இந்தியன் 2 வை தொடர்ந்து Thuglife என்ற திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். இந்தத் திரைப்படம் உலகநாயகன் கமலஹாசன் உடைய மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.

இந்தத் திரைப்படத்தின் உடைய சூட்டிங் சென்னையில் இந்த மாத இறுதியில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

நடிகர் கமல் நடிக்க இருக்கும் இந்த தக் லைப் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 1987-இல் வெளிவந்து ரசிகர்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கும் நாயகன் திரைப்படத்தை உலக நாயகனை வைத்து இயக்கிய மணிரத்தினம் மீண்டும் உலக நாயகனுடன் இணைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிகை திரிஷா ,நடிகர் ஜெயம் ரவி ,துல்கர் சல்மான் ,கௌதம் கார்த்திக் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மணிரத்னம் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே அதில் யாரும் கணிக்க முடியாத ஒரு வித்தியாசமான கதைக்கலமும், சுவாரசியமும் ,காதல் காட்சிகளும் நிறைந்திருக்கும். அதிலும் தற்பொழுது உலகநாயகனுடன் அவர் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் உடைய பெயரே மிகவும் சுவாரசியமாக அமைந்திருக்கிறது.

அதேபோல் இயக்குனர் மணிரத்தினத்தின் திரைப்படங்களுக்கு பாடல்கள் மிகவும் அழகாக அமையும் அதை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் உலகநாயகன் கமலஹாசனின் 233 வது திரைப்படம் இயக்குனர் ஹச் வினோத் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.Thuglife படப்பிடிப்பு முடிந்த பிறகு எச் வினோத் இயக்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Most Popular