Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு vs வாரிசு முதல் நாள் வசூல் யாருக்கு அதிகம் வரும்? - ஒரு கணிப்பு

துணிவு vs வாரிசு முதல் நாள் வசூல் யாருக்கு அதிகம் வரும்? – ஒரு கணிப்பு

- Advertisement -

வாரிசு, துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வரவுள்ளது. இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் பண்டிகை போல் தங்களது ஹீரோக்களின் படத்தை கொண்டாட காத்திருக்கின்றனர். முதல் நாள் டிக்கெட் பெரும்பாலும் விற்று தீர்ந்து விட்டன. மற்ற நாட்களுக்கான டிக்கெட் விற்பனையும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டு படத்திற்கான பிரிவியூ காட்சிகள் சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

இதில் வாரிசு திரைப்படம் சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்ததாக உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளன .இதே போன்று துணிவு திரைப்படத்தில் அஜித் தனது நடிப்பு மூலம் மிரட்டி இருக்கிறார் என்ற தகவலும் வந்திருக்கிறது. இதனால் இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் முதல் நாள் வசூல் எந்த படத்திற்கு அதிகம் வரும் என்ற ஒரு கணிப்பை தற்போது பார்க்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை வாரிசை விட துணிவுக்கு தான் அதிக காட்சிகளும் திரையரங்குகளும் கிடைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் வாரிசை பின்னுக்கு தள்ளி துணிவு முதல் இடத்தை பிடிக்கலாம். எனினும் இந்த இரு படங்களுக்கான வித்தியாசம் சுமார் ஒரு கோடி அளவு தான் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

எனினும் தமிழ்நாட்டுக்கு வெளியே மற்றும் ஒட்டுமொத்த உலக அளவில் பார்த்தால் துணிவை விட வாரிசு அதிக வசூலை பெற்றிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கேரளா, கர்நாடகா, இங்கிலாந்து ,பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் வாரிசு திரைப்படத்திற்கான டிக்கெட் பதிவு துணிவை காட்டிலும் அதிக அளவில் நடைபெற்றிருக்கிறது.

முதல் நாள் வசூல் தமிழகத்தில் வாரிசுக்கு குறைவாக கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறித்து படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்துள்ள பேட்டியில் முதல் நாள் வசூல் பற்றி கவலை இல்லை. ஒட்டுமொத்தமாக கிடைக்கும் வசூலை தான் பார்க்க வேண்டும். அதில் வாரிசு அதிக வசூலை பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். துணிவும் மங்காத்தா அளவிற்கு அஜித் இறங்கி அடித்திருந்தால் தமிழ்நாடு மற்றும் மற்ற ஏரியாக்களிலும் வாரிசுக்கு கடும் சவால் கொடுக்கும். இரண்டு படங்களுமே இரண்டு இடங்களில் முதலிடம் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அஜித் விஜய் ரசிகர் இதுவருமே வெற்றியை கொண்டாடலாம்.

Most Popular