Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமா4 நாள் முடிவில் வசூலில் யார் நம்பர் 1.. வாரிசு? துணிவா? வெளியான தகவல்

4 நாள் முடிவில் வசூலில் யார் நம்பர் 1.. வாரிசு? துணிவா? வெளியான தகவல்

- Advertisement -

தமிழ் சினிமாவின் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பது வாரிசு, துணிவு திரைப்படத்தில் எந்த படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது என்பதுதான். ஜனவரி 11ஆம் தேதி வெளியான இரண்டு படமும் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றதால் இரு படங்களின் வசூலும் அதிகமாக இருந்தது.முதல் நாளை பொறுத்தவரை வாரிசை விட துணிவுக்கு அதிக திரையரங்குகள் கிடைத்தது. இதன் காரணமாக முதல் நாளில் துணிவு 21 புள்ளி 5 கோடி பெற்றிருந்தது.

வாரிசு 20 கோடி அளவில் வசூலை கடந்தது. ஆனால் இதனைத் தொடர்ந்து ஃபேமிலி ஆடியன்ஸ் வாரிசு படத்திற்கு அதிக அளவில் வர தொடங்கியதால் வாரிசின் திரையரங்கு எண்ணிக்கை அதிகமானது. இதன் காரணமாக இரண்டாவது நாள், மூன்றாவது நாள் என தொடர்ந்து இரண்டு நாட்களும் வாரிசு துணிவை விட முந்தியது. இந்த நிலையில் நேற்று முதல் சனிக்கிழமை என்பதால் இரண்டு படங்களும் வசூல் வேட்டையை நடத்தியது. சொல்லப் போனால் முதல் நாள் வசூலை விட வாரிசு படத்திற்கு நான்காவது நாள் வசூல் அதிகமாக வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதற்கு முழு காரணம் நடிகர் விஜய்க்கு பெண்கள் குழந்தை ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கி விட்டனர். இதே போன்று துணிவும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இதுவரை இல்லாத அஜித் திரைப்படங்களை துணிவு முறியடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

துணிவு திரைப்படம் அமெரிக்காவில் ஆறு லட்சம் டாலர்களை கடந்து விட்டது. இதைப் போன்று சிங்கப்பூரில் ஐந்து லட்சம் டாலர்களை கடந்து சாதனைப்படுத்து வருகிறது. வாரிசை பொருத்தவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 10 கோடி வசூலை தாண்டி உள்ளது. அதேபோன்று அமெரிக்காவில் 8 லட்சம் அமெரிக்க டாலர்களையும் சிங்கப்பூரில் ஆறு லட்சம் டாலர்களையும் கடந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தமிழகத்தில் நான்காவது நாள் வசூல் வாரிசு 22 கோடி அளவிலும் துணிவு 21 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரண்டு திரைப்படங்களும் 100 கோடியை உலகம் முழுவதும் கடந்து விட்டது.

இதேபோன்று நேற்று தெலுங்கில் ரிலீஸ் ஆன வாரிசுடு திரைப்படமும் முதல் நாளில் நான்கரை கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது. இரண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் களுக்கு நடுவே வாரிசு திரைப்படம் இவ்வளவு வசூலை பெற்றிருப்பது விஜயின் மார்க்கெட் அங்கு அதிகரித்து விட்டதை காட்டுகிறது. இதேபோன்று துணிவு தெலுங்கு திரைப்படமும் அஜித்துக்கு லாபத்தை தந்துள்ளது.

Most Popular