Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாஅதிகாலை 1 மணிக்கு சிறப்பு காட்சி.. துணிவு, வாரிசுக்கு சிறப்பு ஏற்பாடு

அதிகாலை 1 மணிக்கு சிறப்பு காட்சி.. துணிவு, வாரிசுக்கு சிறப்பு ஏற்பாடு

- Advertisement -

பொங்கல் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் வருகின்ற ஆண்டு தல தளபதி பொங்கல் என்பதால் மக்கள் கூடுதலான மகிழ்ச்சியில் காத்திருக்கிறார்கள்.வருகின்ற ஆண்டு பொங்கலுக்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும், இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் வெளியாக இருப்பதால் தல தளபதி ரசிகர்கள் பொங்கலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் இருவருடைய படத்தையும் ஒன்றாக திரையரங்குகளில் வெளியிடும் பொழுது எப்படிப்பட்ட நெரிசல்களும் இடத்தட்டுப்பாடும் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவார்கள். அதனால் தான் பொங்கல் படங்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கேட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

- Advertisement -

ஆடி மாதம் 12ஆம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதி வரையிலாவது கூடுதல் காட்சிக்கு அனுமதி வேண்டும் என்று கோரிக்கை இட்டு இருக்கிறார். வழக்கமாக காட்டப்படும் கூடுதலான காட்சிகளும் அதிகாலை நேரத்திலும் காட்சிகள் வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கோரிக்கை செயல்பட்டால் தல தளபதி பொங்கல் நிச்சயமாக எந்தவித சங்கடமும் இல்லாமல் ரசிகர்கள் பார்த்து மகிழ்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று திரையரங்க உரிமையாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.இதற்கு தமிழக அரசும் செவி சாய்க்க வேண்டும் என்றும் கோரிக்கைக்கு அனுமதி தர வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு படங்களுக்கும் சரிசமமான காட்சிகள் வேண்டும் என்பதால் அதிகாலை ஒரு மணிக்கு முதல் காட்சி பன்னிரண்டாம் தேதி முதல் 18ஆம் தேதி வரை வெளியிடப்பட உள்ளது .

இதன் மூலம் வாரிசுரிமை இரு படங்களும் போட்ட முதலீடை திரையரங்குகள் மூலம் எடுக்க முடியும் என திரைப்பட உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஏற்கனவே பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டபோது சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் கோரிக்கை கொடுக்கப்பட்டதால் தான் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனால் இம்முறை ஒரு மாதத்திற்கு முன்பு தமிழக அரசின் அனுமதி வேண்டி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Most Popular