சினிமா

வினோத் எதும் தெரியாமல் பேசாதீங்க.. துணிவு படத்தில் மியூச்சல் பண்ட் முதலீடு குறித்து தவறான வசனம்

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திற்கு ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 21 கோடி ரூபாய் துணிவு திரைப்படம் வசூல் செய்திருக்கிறது. இதுபோன்று அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளும் துணிவு படம் முந்தைய அஜித் படங்களின் சாதனையை முறியடித்து இருக்கிறது.

Advertisement

வங்கி கொள்ளை குறித்து மையமாக இந்த படம் எடுக்கப்பட்டதாக கணிக்கப்பட்ட நிலையில் வங்கி முறைகேடு குறித்தும் வங்கியில் நடைமுறை தெரியாமல் ஏமாற்றப்படும் மக்கள் குறித்தும் இந்த படம் முக்கிய கருத்தை பேசுகிறது. இந்த நிலையில் துணிவு படத்தில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்து தவறான வசனங்கள் இடம் பெற்று இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மியூச்சுவல் ஃபண்ட் என்பது தவறான நடைமுறை என்று கருத்தை பரப்பும் வகையில் இந்த படம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட் என்றால் நாம் முதலீடு செய்யும் பணம் குறையவும் செய்யலாம் அதிகமும் ஆகலாம் என்பது அந்த கணக்கு தொடங்குவதற்கு முன்பே வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவன நிர்வாகம் சொல்லிவிடும் என்றும், அதற்கான கையெழுத்தை வாங்கிய பிறகு இந்த கணக்கு தொடங்கப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பொருளாதாரம் குறித்து எந்த அறிவும் இல்லாமல் வினோத் படத்தை தவறாக எடுத்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது அரசு கட்டுப்பாட்டு அமைப்புக்குள் வரும் என்று குறிப்பிட்டுள்ள பொருளாதார நிபுணர்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் நடவடிக்கையை அரசு கண்காணித்து மோசடிகள் எதுவும் நடக்காத படி பார்த்துக் கொள்வதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று விளம்பரம் கூட செய்ய முடியாத நிலையை அரசு வைத்திருப்பதாக சுட்டிக்காட்டி உள்ள பொருளாதாரம் நிபுணர்கள் இதைப் பற்றி தெரியாமல் ஹெச் வினோத் படத்தை தவறாக எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரு விஷயத்தில் ஆபத்து இருப்பதாக சொல்வதில் தவறில்லை என்றாலும் மிகைப்படுத்தி கூறுவது மிகவும் தவறு என்றும் பொருளாதார நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top