சினிமா

“ துணிவு படத்தை குடும்பங்களும் கொண்டாடலாம் ” – படத்தின் கதையை விவரித்துள்ள இயக்குனர் வினோத் !

Thunivu director vinoth interview

பொங்கல் மோதலுக்கு விஜய் – அஜித் என இரு படையினரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ரீலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டதால், தியேட்டர்களும் திருவிழா கணக்காக தயாராகி வருகிறது. பெருவாரியான இடங்களில் டிக்கெட் விற்பனைகள் ஜோராகா போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் சென்னையில் மட்டும் ஆன்லைன் புக்கிங் ஓப்பன் ஆகவில்லை. விரைவில் இரு படங்களுக்கும் ஆரம்பமாகிவிடும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துணிவு படத்திற்கு முதல் காட்சி இரவு 1 மணிக்கும் வாரிசுக்கு அதிகாலை 4 மணிக்கும் ஸ்கிரீன் ஒதுக்கியுள்ளனர். படக்குழுவினர் பக்கம் ரிலீசுக்கு முன் தேவையான அனைத்து வேலைகளும் முடிவடைந்து, பந்தயத்திற்கு வாடிவாசல் மட்டுமே திறக்கப்பட வேண்டிய நிலையில் திரையரங்குகளும் உள்ளன.

Advertisement

புரொமோஷனுக்காக இரு தரப்பினரும் தேவையான அப்டேட்களும் இன்டர்வியூக்களும் கொடுத்து வருகின்றனர். துணிவு படத்தின் இயக்குனர் கலைஞர் & பிஹைன்ட்வுட்ஸ் சேனல்களுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அவர் மட்டுமில்லாமல் படத்தின் நாயகி மஞ்சு வாரியரும் பங்கேற்றுள்ளார்.

நேர்க்கானலில் துணிவு படத்தைப் பற்றி வினோத்திடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அனைத்திற்கும் டிரைலரில் படத்தின் கதை உள்ளது, நன்கு உற்றுநோக்கி பாருங்கள் பதில் கிடைக்கும் என்றே தெரிவித்து வந்தார். படத்தின் முதல் பகுதி, இரண்டாம் பகுதி பற்றி சற்று விரிவாக பின்னர் கூறினார். வினோத், “ படத்தின் முதல் பகுதி முழுசாக ரசிகர்கள் மகிழ்ந்து பார்க்கும் படியாக இருக்கும். அடுத்து வரும் பாதி அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ” என்றுள்ளார். மஞ்சு வாரியரும் அதையே தெரிவித்து இறுதியில் குடும்பத்துடன் வந்து பாருங்கள் என்று குறிப்பிட்டார்.

Advertisement

அது தான் தற்போது பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே சற்று பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வலிமை படமும் இதே சாயலில் இருந்தது என்பதும் அதில் சென்டிமென்ட் காட்சிகள் படத்தையே ஒட்டு மொத்தமாக கவிழ்த்தியது என்பதும் தெரியும். படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் வேண்டாம் என யாரும் குறிப்பிடவில்லை, அதை ஓவர்டோஸ் ஆக்காமல் தேவையான அளவு உபயோகப்படுத்தினால் நிச்சயம் வெற்றி தான்.

அதோடு இயக்குனர் வினோத், “ படத்தை ஒரு வகையில் அடக்கிவிட முடியாது. இதில் ஆக்க்ஷன் உட்பட அனைவரும் என்ஜாய் செய்யும் விதமாக ஓர் ஹோல்சம் திரைப்படமாக இருக்கும். சில ரசிகர்கள் மங்காத்தா அஜித் வேண்டும் என்கிறார்கள், மற்ற சிலர் பில்லா அஜித்தை எதிர்பார்க்கின்றனர் மற்றும் மார்கட்டில் விசுவாசம் போன்ற படங்கள் எடுபடுகின்றன. படத்தை விற்பனை செய்வதில் கூடுதல் கவனம் எங்களுக்கு இருக்கிறது. அதே சமயம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவும் நாங்கள் முயற்சித்துள்ளோம். ” என்றார்.

படத்தில் தங்கதுரை, ஜி.பி.முத்து, மைப்ப்பா போன்றோர் இருப்பதால் கொஞ்சம் காமெடி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இயக்குனர் வினோத் பேசியதை வைத்துப் பார்க்கையில் குடும்ப சென்டிமென்ட்டும் படமாக்கப்பட்டுள்ளது அறியப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அதை சிறப்பாகச் செய்தால் கட்டாயம் இது துணிவு பொங்கல் தான்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top