சினிமா

அநீதி கண்டு பொங்கி எழுபவனா? வங்கி கொள்ளையன் கிடையாதா.. வெளியான கேங்ஸ்டா பாடல் வரி

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பாடல் வரிகளை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள். படத்தின் கதைக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லாத வகையில் வரிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் அஜித் உண்மையிலே வங்கி கொள்ளையில் ஈடுபடுகிறாரா? இல்லை வேறு ஏதாவது பின்னணி கதை இருக்கிறதா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட டிவீட்டில் இந்தப் பாடல் வரிகளை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு பாடலின் வரிகளை வெளியிட்டுள்ளார்.முதன்முறையாக பாடலுக்கு முன்பே பாடல் வரிகள் மட்டும் வெளியாகிருப்பது புதிய யுத்தியாக பார்க்கப்படுகிறது. பாடல் வரிகள் தொடக்கத்தில் சீண்டுனா சிரிப்பவன் சுயவழி நடப்பவன். சரித்திரம் படைப்பவன். பகைவனுக்கு இறக்கப்பட்டு பணிந்து போற துணிவு கொண்டு பயணம் செய்யும் குணம் கொண்டவன்.

நீதி காக்கும் நேர்மை கொண்டவன். அநீதி கண்டு பொங்கி எழுபவன். பெத்த பொண்ண காக்கும் அப்பனும் கூட கேங்ஸ்டா தாலாட்டும் தாய் சீறும்போது who the who the gansta, i said who the gansta,common common சொல்லு who the gansta, நம்பிக்கை இழக்காமல் போர் தொடுப்பவன்.

Advertisement

கடைசி நிமிடம் வரை கரம் கொடுப்பவன். வன்முறை தெரிந்தும் கண்ணில் அமைதி கொண்டவன். வங்கக் கடலின் ஆழம் தெரிந்தும் இறங்குவானா துணிஞ்சா வெற்றி நமதே துணிஞ்சா வெற்றி நமதே. வா பதிலடித்தான் தெரியுமடா, உனக்கு சம்பவம் இருக்கு பார். முடிவில் யார் பதிலடிதான் இனிமே பிரச்சனை எதுக்கு அச்சத்தை விலக்கி உச்சத்தை பிடித்து தடைய உடைத்த பயத்த தெரிச்சி ஊருக்குள்ள உள்ள மொத்த பயபுள்ள எதிர்த்து நிற்கட்டும் என்று பாடல் வரிகள் உள்ளன.

ராப் பாடல் மாதிரி இந்தப் பாடல் இடம்பெறும் என்பதால் முன்பே வரிகளை பட குழு வெளியிட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில வரிகள் வா பதிலடிதான் தெரியும்ண்டா உனக்கு சம்பவம் இருக்கு பார் முடிவில் யார் என்ற வரிகள் எல்லாம் விஜயை பார்த்து பாடுவது போல் இடம்பெற்று இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top