துணிவு திரைப்படம் தமிழக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக நடிகர் அஜித்துக்கு தமிழ் நாட்டு அளவில் அதிக ரசிகர்கள் இருந்தாலும் வெளிநாட்டில் அவருடைய படங்கள் விஜயை காட்டிலும் பெரிய அளவில் வசூல் செய்வது இல்லை. இது அஜித் உடைய மார்க்கெட்டிற்கு பெரும் பின்னடைவாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் துணிவு அந்த நிலையை மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் துணிவு படத்தில் மிக ஸ்டைலிஷ் ஆக இருப்பதால் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்த்து அஜித்தின் துணிவு படம் இரண்டு நாட்களில் மூன்று கோடியே 66 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இது அமெரிக்காவில் அஜித் திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங் ஆகும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை 1 மில்லியன் டாலர் கிளப் என்று தமிழ் படங்களுக்கு ஒரு தனி விசேஷ பட்டியல் இருக்கிறது. இதில் நடிகர் விஜயின் தெறி ,மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் ஆகிய ஐந்து திரைப்படங்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 7 படங்களில் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் என்ற கிளப்பில் இருக்கிறது.
ஆனால் இந்த கிளப்பில் இதுவரை அஜித்தின் படம் இடம் பெறவில்லை. ஆனால் தற்போது துணிவு திரைப்படம் இந்த மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை துணிவு திரைப்படம் அமெரிக்க டாலர் மதிப்பில் 4 லட்சம் என்ற மைல் கல்லை பெற்றுள்ளது. இதனால் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் விரைவில் துணிவு சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் துபாய் ,இங்கிலாந்து போன்ற வெளிநாட்டுகளிலும் துணிவு படத்திற்கு நல்ல வசூல் பெற்றிருக்கிறது. முந்தைய அஜித் படங்களில் ரெக்கார்டுகளை துணிவு உடைத்துள்ளது. இதனால் துணிவுக்கு முன் துணிவுக்கு பின் என்று அஜித்தின் வெளிநாட்டு மார்க்கெட் மாறும் என்று திரைத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.