Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு 2வது பாடல் ரிலீஸ் எப்போது? பதிலுக்கு வாரிசின் அனிரூத் பாடல் வெளியாகிறதா?

துணிவு 2வது பாடல் ரிலீஸ் எப்போது? பதிலுக்கு வாரிசின் அனிரூத் பாடல் வெளியாகிறதா?

- Advertisement -

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு  ஜிப்ரான் இசையமைக்கிறார். இது அவருடைய 50வது திரைப்படமாகும். வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித், வினோத் இணைந்து மூன்றாவது முறையாக இந்த படத்தை பணியாற்றி வருகின்றனர். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில்லா சில்லா என்ற துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள காசேதான் கடவுளடா என்ற இரண்டாவது பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அஜித் ரசிகர் எதிர்பார்த்து உள்ளனர். இதற்கு காரணம் இந்த பாடலை ஹிப்பாப் ஆதி பாடியிருக்கிறார். 2கே கிட்ஸ் இடையே பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை ஹிப்பாப் ஆதி வைத்திருக்கிறார். இதனால் அவர்களை குறி வைத்து இந்த பாடல் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த பாடல் லீக் ஆன நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.ஏற்கனவே காசேதான் கடவுளடா என்று அஜித் வேதாளம் படத்தில் ஒரு காட்சியில் பாடுவார். அதையே இந்தப் பாடத்தில் டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஜிப்ரான் காசேதான் கடவுளடா என்று டிவிட் போட்டுள்ளார். இதனால் இந்த பாடல் குறித்து அப்டேட் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

இதனிடையே இந்த பாடலுக்கு பதிலடி தரும் விதமாக வாரிசு படத்தில் தங்களுடைய மூன்றாவது பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. துணிவு படத்தில் பாடியிருப்பது போல் வாரிசு படத்திற்கும் அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதுவும் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் காசேதான் கடவுளடா பாடலும் வாரிசின் மூன்றாவது சிங்கிலும் ஒரே நாளில் ரிலீசானால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular