Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாநல்ல படத்திற்கு புரோமோசன் தேவையில்ல.. துணிவுக்கு வேற லெவல் புரோமோசனில் இறங்கிய போனி கபூர்

நல்ல படத்திற்கு புரோமோசன் தேவையில்ல.. துணிவுக்கு வேற லெவல் புரோமோசனில் இறங்கிய போனி கபூர்

- Advertisement -

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் இது போன்று ஒரு விழா துணிவு திரைப்படத்திற்கு நடைபெறுமா என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் ஏற்கனவே பட குழு திட்டமிட்ட இசை வெளியீட்டு விழாவிற்கு தான் பங்கேற்க மாட்டேன் என்று அஜித் கூறி நிராகரித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் நல்ல படங்களுக்கு ப்ரமோஷன் தேவையில்லை. அந்த படமே  பிரபலப்படுத்திக் கொள்ளும் என்று அஜித் கருத்து தெரிவித்ததாக அவருடைய பிஆர்ஓ சுரேஷ் சந்திரா டிவிட் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு மிகப் பிரம்மாண்டமான அளவில் ப்ரோமோசன் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி துபாயில் ஆகாயத்திலிருந்து பாராசூட் மூலம் துணிவு போஸ்டரை பிடித்தபடி சாகச வீரர்கள் குதிக்கும் வீடியோ ஒன்றை  ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வெளியிட்டுள்ளார். இதில் ஆகாயத்திலிருந்து வீரர்கள் அஜித்தின் போஸ்டருடன் குதிக்கும் காட்சி பார்ப்பதற்கு வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

இதேபோன்று டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு விழாக்காக துபாயில் மக்கள் கூடும் நேரத்தில் உலகத்தில் உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் துணிவு படத்தின் போஸ்டரை வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விக்ரம் திரைப்படத்திற்கு இதுபோன்ற ப்ரமோஷன் செய்யப்பட்ட நிலையில் தற்போது துணிவு பட குழுவும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது. இந்த நிலையில் அஜித்தின் கருத்துக்கு மாறாக இந்த படப் ப்ரோமோஷன் வேலை நடைபெறுவதாக அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் வேண்டாம் என அஜித் முடிவு எடுத்துள்ள நிலையில் ஏன் இவ்வாறு பட குழு நடந்து கொள்வதாக அவர்கள் கேள்வி எழுப்பினர். இதேபோன்று விஜய் ரசிகர்களும் நல்ல படத்திற்கு ப்ரமோஷன் தேவை இல்லை என்று கூறிவிட்டு தற்போது ப்ரோமோஷன் செய்வதால் துணிவு நல்ல படம் கிடையாதா என்று சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.அஜித்திற்கு  இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க பிடிக்காது என்பதற்காக இவ்வாறு காரணத்தை கூறி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எது எப்படியோ புர்ஜ் கலிபாவில் அஜித்தின் புகைப்படம் இருந்தால் அது வேற லெவல் மாஸாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Most Popular