Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாமங்கத்தா வைப்ஸ் கொடுக்கும் துணிவு 2வது பாடல்.. ஒரு மணி நேரத்தில் படைத்த சாதனை என்ன?

மங்கத்தா வைப்ஸ் கொடுக்கும் துணிவு 2வது பாடல்.. ஒரு மணி நேரத்தில் படைத்த சாதனை என்ன?

- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் சிலாசில்லா என்ற பாடல் ஏற்கனவே அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் துணிவு படத்தின் இரண்டாவது பாடல் இன்று மதியம் 2 மணிக்கு சமூக வலைத்தளத்தில் வெளியானது. காசேதான் கடவுளடா என்ற அந்தப் பாடலை பாடலாசிரியர் வைசாக் எழுதி , பாடி இருக்கிறார்.

படத்தின் கதாநாயகியான மஞ்சு வாரியர் இந்தப் பாடலுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். கடந்த சில படங்களில் அஜித் மிகவும் அமைதியான தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் , இதில் கொஞ்சம் சுறுசுறுப்பாக அதிரடியை காட்டி இருக்கிறார். பின்னணி இசையும் மனதில் தங்கும் அளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் youtube-ல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்களை இந்த பாடல் பெற்றிருக்கிறது. எனினும் துணிவு படத்தில் முதல் பாடலை விட இது லைக்ஸ் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகும். மேலும் விஜயின் வாரிசு படத்தின் பாடலை விடவும் குறைவான பார்வையாளர் எண்ணிக்கையை இந்த பாடல் பெற்றிருக்கிறது. இதற்கு காரணம் ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் இந்த பாடல் ரிலீஸ் ஆனது தான் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் அஜித் 2011 ஆம் ஆண்டு மங்காத்தா படத்தில் விளையாடும் மங்காத்தா போன்ற பாடலில் செம மாசாகவும் கிளாஸ் ஆகவும் இருப்பார். தற்போது அதே நினைவுகளை இந்த பாடலும் கொடுப்பதால் அஜித் ரசிகர்கள் இந்த படம் மங்காத்தா போன்று ஹிட் ஆகும் என நம்பிக்கையில் இருக்கின்றனர். இதனிடையே படத்தின் டீசர் வரும் கிறிஸ்மஸ் அல்லது புத்தாண்டு நாளை ஒட்டி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது என்பது பாடல்களின் வரிகள் மூலமாக தெளிவாக தெரிகிறது. இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருகிறார். வங்கிக் கொள்ளையை ஏன் செய்கிறார்? எப்படி செய்கிறார் ? இதற்கான பின்னணி காரணம் என்ன என்பதையே துணிவு திரைப்படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular