Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு படத்தின் சில்லா சில்லா பாடலைத் தொடர்ந்து 2வது பாடலும் லீக் ! ஹிப் ஹாப்...

துணிவு படத்தின் சில்லா சில்லா பாடலைத் தொடர்ந்து 2வது பாடலும் லீக் ! ஹிப் ஹாப் தமிழா பாடிய பாடல் !

கோலிவுட்டின் தற்போதைய டாப் 2 போட்டியாளர்களான விஜய் மற்றும் அஜித்தின் அடுத்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகிறது. 8 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் ஒரே சமயத்தில் படத்தை வெளியிட்டு மோதிக் கொள்கின்றனர். இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர்.

- Advertisement -

படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 1 மாதமே இருப்பதால் இரு படக்குழுவும் தீவிர புரொமோஷன் வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாரிசு படத்தைப் பொறுத்தவரை இதுவரை இரு பாடல்கள் ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி வெளியாகியுள்ளது. இரண்டும் அபார வரவேற்பையும் பெற்றுள்ளது. வாரிசு படத்தில் இன்னும் 3 மீதம் என மொத்தம் 5 பாடல்கள் உள்ளதாம்.

இந்தப் பக்கம் அடுத்தடுத்த பாடல்களை பெற்று விஜய் ரசிகர்கள் குஷியாக இருக்க மறுபக்கம் துணிவு படத்தின் அப்டேட்க்கு ஏங்கிக் கிடந்தனர் அஜித் ரசிகர்கள். இரு தினங்களாக அவர்களுக்கு சிறப்பான விருந்து. நடிகர் அஜித்குமாரின் கிளாசியான புகைப்படங்கள் பல குமுதம் மூலம் வந்தது. மங்காத்தா, ஆரம்பம் அஜித் மீண்டு வந்துள்ளது போல் இருக்கிறது.

- Advertisement -

துணிவு பாடல் லீக்

கிப்ரான் இசையில் சில்லா சில்லா பாடலின் வரிகளை வைஷாக் எழுதியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் முதல் பாடலான சில்லா சில்லா டிசம்பர் 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தயாரிப்பு நிர்வாகத்திடம் இருந்து செய்து வந்தது. நேற்று இரவு 8 மணி அளவில் அப்பாட்டின் 10 விநாடிகள் இணையத்தில் லீக் ஆகிவிட்டது.

- Advertisement -

அதில் அனிருத்தின் குரலைக் கேட்ட ரசிகர்கள், “ இது ஆலுமா டோலுமா வைப்ஸ் ” என்கின்றனர். வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாட்டின் புரோமோவும் இதே போல லீக் ஆகி உலகெங்கும் பயங்கர ட்ரெண்ட் ஆனது. இதோடு நிறுத்தாமல் இன்று காலை படத்தின் அடுத்தப் பாடலான ‘ காசேதான் கடவுளடா ’ லீக் ஆனது. இந்தப் பாட்டை ஹிப் ஹாப் தமிழா பாடியிருக்கிறார். இந்தப் பாட்டின் ஷூட்டிங் தான் கடைசியில் நடந்தது என்பது லீக்கானது வீடியோவின் மூலம் தெளிவாக தெரிந்தது.

பலர் இது வேண்டுமென்றே விளம்பரத்துக்காக செய்யப்பட்டது எனக் காரணம் கூறுகின்றனர். ஷூட்டிங்கின் போது வாரிசு படத்தின் காட்சிகள் சில கசிந்தன, அது போல் துணிவுக்கு பாடல்கள் லீக்காகிறது.

Most Popular