Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு ரசிகர் மன்ற காட்சிக்கு புதிய சிக்கல்.. இரவு 1 மணி காட்சி ரத்தாக வாய்ப்பு

துணிவு ரசிகர் மன்ற காட்சிக்கு புதிய சிக்கல்.. இரவு 1 மணி காட்சி ரத்தாக வாய்ப்பு

- Advertisement -

நினைப்பது ஒன்றும் நடப்பதும் ஒன்றும் ஆக தயாரிப்பாளர் போனி கபூருக்கு உள்ளது. பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிட்டால் வசூலை அள்ளிவிடலாம் என நினைத்து துணிவு திரைப்படத்தை  அறிவித்தார். போனி கபூர் படத்தை ஒரு நாள் முன்பு ரிலீஸ் செய்தால் கூடுதல் வசூல் கிடைக்கும் என நினைத்த போனி கபூர் வரும் 11ஆம் தேதி அறிவிக்க,  வாரிசு திரைப்படத்தையும் அதே நாளில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு பட குழு அறிவித்தது.

இந்த நிலையில் துணிவு படத்தை இரவு ஒரு மணியிலிருந்து தொடங்க போனி கபூர் திட்டமிட்டார். ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் இரவு ஒரு மணிக்கு தமிழகம் முழுவதும் திரையிட துணிவு பட குழு ஏற்பாடு செய்தது. இதன் ஒரு டிக்கெட் 2000 ரூபாய் என்று அளவிற்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக பெரிய வசூலை அள்ளிவிடலாம் என போனி கபூர் திட்டமிட்டார். ஆனால் தற்போது அதற்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளது .

- Advertisement -

படத்தின் அனைத்து கன்டென்டுகளையும் அனுப்பும் கியூப் நிறுவனம் கேடிஎம் ( படத்தை திரையிடும் அனுமதி)  வழங்கினால் மட்டுமே படத்தின் காட்சிகளை திரையரங்கில் திரையிட முடியும். பொதுவாக ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆவது என்றால் முதல் காட்சிக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் கேடிஎம் வழங்கப்படும். தற்போது வாரிசு 4 மணிக்கு ரிலீஸ் ஆவது என்றால் இரண்டு மணிக்கு தான் கியூப் நிறுவனம் கேடிஎம் வழங்கும். ஆனால் துணிவு திரைப்படம் ஒரு மணிக்கு காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதற்கு கேடிஎம் கிடைப்பது மிகவும் சிரமம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பெரிய நிறுவனங்கள் படம் மட்டும் எந்த சிக்கலும் இல்லாமல் ஒரு நாள் முன்பே கேடிஎம் கிடைத்துவிடும். ஆனால் பினான்சியல் பிரச்சனை போல் ஏதேனும் ஒரு பிரச்சனை உருவானால் கேடிஎம் கிடைப்பது சிக்கல் ஏற்படும். தற்போது துணிவு திரைப்படத்திற்கு ஒரு நாள் முன்பே கேடிஎம் கிடைக்க பட குழு முயற்சி செய்தது. ஆனால் இத்தனை திரையரங்குகளுக்கும் கன்டென்டுகளை அனுப்பி கேடிஎம் ஐ விரைவாக வழங்குவது சாத்தியம் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக துணிவு திரைப்படத்தின் நள்ளிரவு ஒரு மணி காட்சி ரத்தாக வாய்ப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் துணிவு திரைப்படத்திற்கு இரவு 1 மணி காட்சிகளும் வாரிசு திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular