Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு திரைபடத்தின் டிரைலர் தேதி.. தகவலை வெளியிட்ட விநியோகஸ்தர்

துணிவு திரைபடத்தின் டிரைலர் தேதி.. தகவலை வெளியிட்ட விநியோகஸ்தர்

- Advertisement -

உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து இருப்பது ஒன்றே ஒன்றுக்கு தான் . அது துணிவு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி தான். 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் உடன் மோதலில் அஜித் படம் ஈடுபட உள்ளதால் துணிவு படுத்ததற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. துணிவு படத்தில் அஜித்தின் லுக், கிளாஸ் மற்றும் மாஸாக இருப்பதால் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் துணிவு படத்தில் நடத்தி இருக்கிறார்.

அஜித் நெகட்டிவ் கேரக்டர் செய்தாலே படம் பட்டையை கிளப்பும். மேலும் இது வங்கி கொள்ளை தொடர்பான படம் என்பதால் மணி ஹிஸ்ட் போன்று விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த படத்தில் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதுவரை படத்தின் ஒரு காட்சிகள் கூட சமூக வலைத்தளத்தில் வெளியாகவில்லை.

- Advertisement -

புத்தாண்டு பரிசாக துணிவு திரைப்படத்தின் டீசரை வரும் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு வெளியிட பட குழு முடிவெடுத்திருக்கிறது. இதனை மிகவும் பிரம்மாண்டமாக செய்ய போனி கபூர் திட்டம் தீட்டு இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் துணிவு படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்.
இதனால் அஜித் ரசிகர்களுக்கு இந்த புத்தாண்டு டபுள் கொண்டாட்டத்தை கொடுக்கும் என்பது சந்தேகம் இல்லை. துணிவு டீசர் ரிலீஸ் தேதி பட குழு அறிவிக்காத நிலையில் வெளிநாட்டு விநியோகஸ்தர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் துணிவு ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் வாரிசு படத்தின் டிரைலர் ஜனவரி 2 அல்லது 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என நாம் ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறோம். இதனிடையே நெல்லையை பிரபல திரையரங்கமான ராம் சினிமாஸ் விஜய் அஜித் ரசிகர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. அதில் இது ரசிகர்களும் எவ்வித மோதலும் இன்றி அவரவர் படத்தை கொண்டாட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர் கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு இரு ரசிகர்களும் ஒப்புதல் வழங்கி இருக்கிறாரதான்.

Most Popular