Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஏலேய்.. இது பீஸ்ட் பார்ட் 2 டா! துணிவு டிரைலரால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம், விஜய்...

ஏலேய்.. இது பீஸ்ட் பார்ட் 2 டா! துணிவு டிரைலரால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

- Advertisement -

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே துணிவு திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித், ஹச் வினோத் மீண்டும் கூட்டணி போட்டு அமைந்திருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோன்று 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் உடன் அஜித் படம் நேரடியாக மோதுகிறது. இதனால் எந்த படம் வெற்றி பெறும் என ஒட்டுமொத்த சினிமா உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் வெளியான துணிவு திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. பீஸ்ட் படத்தில் தீவிரவாதிகள் எப்படி ஷாப்பிங் மாலை ஹைஜெக் செய்து மிரட்டுவார்களோ இதேபோன்று துணிவு திரைப்படத்திலும் அஜித் வங்கிக் கொள்ளையனாக வந்து பணத்தை கொள்ளையடிக்கிறார். வலிமை படத்தில் எப்போதும் அமைதியாக பேசும் நடிகர் அஜித் இந்த படத்தில் கொஞ்சம் கலகலவென பேசுவது ஆறுதலை அளிக்கிறது.

- Advertisement -

மேலும் அஜித்தின் லுக் டாப் கிளாஸ் ஆக இருப்பது பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இது தவிர ட்ரெய்லரை வேறு ஏதும் குறிப்பிடும்படி இல்லை. படம் வங்கி கொள்ளை பற்றியது என தெரிந்து விட்டதால் திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை என்றால் பீஸ்டுக்கு நிகழ்ந்த கதியே துணிவுக்கு நிகழும் என்று சினிமா ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

- Advertisement -

இந்த ட்ரெய்லரில் அஜித்திடம் உங்களுக்கு என்ன சார் வேண்டும் என்று போலீஸ் கேட்கும் போது பேங்கில் என்ன குவாட்டரும் பிரியாணி கேட்பாங்க என்று அஜித் கூறுவதற்கு அவரது ரசிகர்களே சிரிப்பார்களா என்று தெரியவில்லை. மணி ஹீஸ்ட், பேட்மேன் ரேஞ்சுக்கு அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் துணிவு படம் பீஸ்ட் பார்ட் 2 போல் வந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். எனினும் எச் வினோத் வித்தியாசமாக திரைக்கதையில் ஏதேனும் எழுதி இருந்தாலோ, அஜித்தின் கதாபாத்திரத்திற்கு ஏதாவது முன் கதை இல்லை ட்விஸ்ட் வைத்திருந்தாலோ மட்டும் படம் காப்பாற்றப்படலாம். இதேபோன்று படத்தின் ரிலீஸ் தேதியும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular