சினிமா

லீக் ஆகியது துணிவு வாரிசு படம்… ! பிரீமியர் காட்சிகள் செய்த உபத்திரவம்… !

Thunivu Varisu leaks

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துணிவு வாரிசு படத்தின் நேரடி மோதல் இன்னும் ஒரு நாளுக்குள் துவங்கிவிடும். இரு தரப்பு ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். தியேட்டர்கள் எல்லாம் திருவிழா போல் பேனர்கள் மூலம் அலங்காரப்பட்டு தயாராக உள்ளது. மல்டிபிலெக்ஸ் தியேட்டர்களும் அவர்களது டிக்கெட் விற்பனைகளை கான் இமைப்பதற்குள் சேல் செய்துவிட்டனர்.

துணிவு படத்தின் முதல் காட்சி இரவு 1 மணிக்கும் வாரிசுக்கு அதிகாலை 4 மணிக்கும் நேரம் ஒதுக்கியுள்ளனர். இதற்கு முன்பே நேற்று ஐக்ய அரபு நாட்டில் 2 படத்திற்கு பிரீமியர் காட்சிகள் ஸ்கிரீன் செய்யப்பட்டன. அதன் விமர்சனங்கள் வருவதற்கு முன்பே படத்தின் ஸ்பாய்ளர்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

Advertisement

கிப்ரானின் மிரட்டலான இசையில் தயாரான துணிவு படத்தின் டைட்டில் கார்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதோடு வாரிசு படத்தின் சில காட்சிகளும் லீக் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. என்னதான் ஆர்வத்தில் சிலர் ஷேர் செய்தாலும் முழுமையாக தியேட்டரில் கண்டுகளிக்கவே ஆயிரம் கணக்கில் செலவு செய்யும் ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றம் தான்.

பிரீமியர் ஷோகளுக்கு ஒன்று செல்போன் அனுமதிக்கக் கூடாது அல்லது பிரீமியர் ஷோக்களே இருக்கக்கூடாது என விரக்தியில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இன்று பிரீமியர் மூலம் லீக் ஆன காட்சிகள் நாளை பலரது ஷாட்சப் ஸ்டேட்டஸ்களில் உலா வரும். இதெயல்லம் பார்க்காமல் நேரடியாக திரையரங்கில் கான வேண்டுமென்று விரும்பும் ரசிகர்கள் இதிலிருந்து சில நேரத்திற்கு விலகி இருப்பது நல்லது.

Advertisement

சமீபத்தில் லீக் பிரச்சினைகள் அஜித் ரசிகர்களுக்கு தான் புதிது. ஆனால் விஜய் ரசிகர்களுக்கு கடைசி மூன்று படங்களாக இது தான் நடக்கிறது. மாஸ்டர் படத்தின் பல காட்சிகள் ரிலீசுக்கு முந்தைய நாள் இரவு வெகு தீவிரமாக வைரல் ஆனது. பீஸ்ட் பட டப்பிங் மூலம் சில காட்சிகள் சென்ற படத்திலும் நேரடி சண்டைக் காட்சிகள் வாயிலாக வாரிசு படத்தின் காட்சிகளும் வெளியாகின. இதேயல்லம் பார்வையாளர்கள் தவிர்ப்பது பாராட்டுக்குரிய விஷயமாக இருக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top