தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படம் வெற்றி பெற்றதா தோல்வி பெற்றதா என்று எவ்வளவு திரையரங்குகளில் வசூல் செய்திருக்கிறது என்பதைப் பொறுத்து கணிக்கப்படுகிறது. ஆனால் இந்த வசூல் தொகையில் சில பல குளறுபடிகள் ஏற்படுகிறது. இதில் நம்பகத்தன்மை இல்லை என பல ரசிகர்களும் குற்றச்சாட்டு வருகின்றனர்.
ஒரு காலத்தில் ஒரு படம் ஹிட்டா இல்லையா என்பதை எத்தனை திரையரங்குகளில் எவ்வளவு நாட்கள் படம் ஓடி இருக்கிறது என்பதை பொறுத்து கூறுவார்கள். இதேபோன்று ஒரு படத்தை திரையரங்கில் எத்தனை பேர் தமிழ்நாட்டில் பார்த்திருக்கிறார்கள் என்பதை வைத்தும் கூறுவார்கள்.
அப்படி 2000 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இந்த 23 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட டாப் 10 படம் எவை என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம். இதனை ஒரு கோடியே 60 லட்சம் பேர் திரையரங்குகளில் வந்து பார்த்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது சந்திரமுகி இதனை ஒரு கோடியே 45 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். மூன்றாவது இடத்தில் பாகுபலி 2 இருக்கிறது. இதனையும் ஒரு கோடியே 45 லட்சம் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்திருக்கிறார்கள்.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் பொன்னியின் செல்வன் இருக்கிறது .இதனை ஒரு கோடியே 40 லட்சம் பேர் கண்டு களித்து இருக்கிறார்கள். ஐந்தாவது இடத்தில் ரஜினியின் எந்திரன் திரைப்படம் பிடித்திருக்கிறது இதனை ஒரு கோடியே 35 லட்சம் பேர் திரையரங்குகளில் பார்த்திருக்கிறார்கள்.
இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தில் விஜய் நடித்த கில்லி திரைப்படம் இடம் பிடித்திருக்கிறது. இதனை ஒரு கோடியே 25 லட்சம் பேர் திரையரங்குகளில் கண்டு களித்து இருக்கிறார்கள். ஏழாம் இடத்தில் கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் திரைப்படம் உள்ளது. இதனையும் ஒரு கோடியே 25 லட்சம் பேர் திரையரங்குகளில் பார்த்திருக்கிறார்கள். எட்டாவது இடத்தில் விக்ரமும் கிட்டத்தட்ட அதே அளவில் திரையரங்குகளில் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
ஒன்பதாவது இடத்தில் நடிகர் விக்ரம் நடித்த அன்னியன் திரைப்படம் இருக்கிறது. இதனை ஒரு கோடியே 20 லட்சம் பேர் திரையரங்குகளில் கண்டு களித்திருக்கிறார்கள். பத்தாவது இடத்தில் விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல திரைப்படம் இருக்கிறது. இதனை ஒரு கோடியே 15 லட்சம் பேர் திரையரங்குகளில் கண்டு களித்திருக்கிறார்கள்.