இந்தியா முழுவதும் தியேட்டரில் தேவையான டிக்கெட்களை முன் பதிவு செய்யும் ஆப்களில் மிகவும் பிரபலமானது புக் மை ஷோ என்ற ஆப். இந்த ஆப் மூலம் தான் இந்தியா முழுவதுமே தியேட்டரில் டிக்கெட் பதிவு செய்ய பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்பொழுது நான்கு விதமான பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதாவது இந்த வருடம் முழுவதும் புக் மை ஷோ ஆப்பிள் முன்பதிவு செய்யப்பட்ட படங்களில் நான்கு விதமாக பிரித்து பட்டியலிட்டு இருக்கிறது.எதிர்பார்ப்பை மீறி வெற்றியடைந்த படங்கள்,
அதிகம் பார்க்கப்பட்டு வசூல் வேட்டையாடிய படங்கள்,
பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்,
அதிவேகத்தில் முன்பதிவு செய்யப்பட்ட படங்கள் நான்கு பட்டியல்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதில் எதிர்பார்ப்பை மீறி வெற்றி அடைந்த படங்கள் என்ற பட்டியலில் கண்டாரா, தி காஷ்மீர் ஃபைல்,
கார்த்திகேயா 2 ,சீதாராமம் ,777 சார்லி ஐந்து படங்களும் இடம் பிடித்திருக்கிறது.இதனை அடுத்து அதிகம் பார்க்கப்பட்டு வசூல் வேட்டையாடிய படங்கள் என்ற பட்டியலில்
கே ஜி எஃப் சாப்டர் 2 ,ஆர் ஆர் ஆர், பொன்னியின் செல்வன் 1, பிரம்மாஸ்திர பார்ட் 1 சிவா, விக்ரம் ஆகிய படங்களும் இடம் பிடித்திருக்கிறது.
இந்த ஆண்டிற்கான பத்து பிளாக்பஸ்டர் திரைப்படத்திற்கான பட்டியலில் கே ஜி எஃப் சாப்டர் 2, ஆர் ஆர் ஆர், காந்தாரா ,காஷ்மீர் ஃபைல், பொன்னியின் செல்வன் 1, பிரம்மாஸ்திரா, விக்ரம், திரிஷ்யம் டு, புல் புலைய்யா 2 , த டாக்டர் ஸ்ட்ரேஞ் ஆகிய திரைப்படங்களும் இடம் பிடித்திருக்கின்றது.
இறுதியாக இந்த ஆண்டு அதிவிரைவாக முன்பதிவு செய்யப்பட்ட படங்கள் என்ற பட்டியலில் பாலிவுட்டில் கேஜிஎப் சாப்டர் 2 ,டோலிவுட் ஆர் ஆர் ஆர் கோலிவுடில் பீஸ்ட் ,பொன்னியின் செல்வன் மற்றும ஹாலிவுட் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஆகிய திரைப்படங்களும் இடம் பிடித்திருக்கின்றது. அஜித்தின் வலிமை திரைப்படம் இதில் ஒரு பட்டியலிலும் இடம்பெறவில்லை.