Saturday, June 22, 2024
- Advertisement -
Homeடாப் 102023 முதல் பாதியில் லாபத்தைப் பெற்ற டாப் 10 படங்கள்.. ! பட்டியலில் பத்து தல...

2023 முதல் பாதியில் லாபத்தைப் பெற்ற டாப் 10 படங்கள்.. ! பட்டியலில் பத்து தல இல்லை.. !

இந்த ஆண்டு துவங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த. இந்த இடைப்பட்ட காலத்தில் கோலிவுட்டில் நல்ல படங்களும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய படங்களும் வந்தன. விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றும் வசூலில் சிறந்து விளங்கிய படங்களும் அடங்கும்.

- Advertisement -

2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் வசூலில் டாப் 10 இடங்களைப் பெற்ற படங்களின் பட்டியலைக் இக்கட்டுரையில் காண்போம். இதில் பெரிய படங்களை விட சின்ன சின்ன படங்களே ஆதிக்கதைச் செலுத்தியுள்ளன. கமல்ஹாசனின், “ மக்கள் நல்ல படங்களை நிச்சயம் கொண்டாடுவார்கள் ” எனும் சொற்களை பார்வையாளர்கள் காப்பாற்றி வருகின்றனர்.

துணிவு – வாரிசு

எட்டு ஆண்டுகள் கழித்து விஜய் – அஜித்தின் படங்கள் ஒன்றாக பொங்கலுக்கு மோதின. ஹெச்.வினோத்தின் துணிவு திரைப்படத்தில் பழைய ஆக்சன் அஜித்குமாரையும் தெலுங்கு இயக்குனர் வம்சியின் வாரிசு படத்தில் விண்டேஜ் விஜய்யையும் ரசிகர்கள் கண்டாதாக கூறி கொண்டாடி தீர்த்தனர்.

- Advertisement -

விமர்சன ரீதியாக வாரிசு திரைப்படம் சற்று சருக்கினாலும் வசூலில் நல்ல லாபத்தைப் பார்த்தது. மறுபக்கம் துணிவு திரைப்படம் இரண்டிலும் வென்றது. மேலும் 2 படமும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

- Advertisement -

டாடா – வாத்தி – அயோத்தி

கவின் – அப்ரனா அற்புதமான நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கவினின் அபார நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. தனுஷ் நடிப்பில் தமிழ் – தெலுங்கு என இறுமொழிப் படமாக வெளியான வாத்தி திரைப்படம் தகுந்த கமர்ஷியல் படமாக அமைந்தது. இப்பட்டியலில் அடுத்து இருக்கும் திரைப்படம் சசிகுமாரின் அயோத்தி. உண்மையை மையமாகக் கொண்ட இந்தப் படம் மனிதநேயத்தை எடுத்துரைத்து லாபத்தையும் பார்த்தது.

விடுதலை – பொன்னியின் செல்வன் 2

வெற்றிமாறன் – சூரி – விஜய் சேதுபதி கூட்டணியில் தயாரான விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் இறுதியில் வெளியானது. விசாரணை படத்தை விட கொடுமையான காட்சிகளைக் கொண்ட இந்தப் படம் எதிர்பார்த்தது போலவே சூப்பர் ஹிட்டும் ஆனது. மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் 2 முதல் பாகத்தின் அளவு வசூலைப் பெறவில்லை என்றாலும் லாபமாக படமாகவே அமைந்தது.

குட் நைட் – பிச்சைக்காரன் 2 – போர் தொழில்

ஃபீல் குட் படமாக கொண்டாடப்பட்ட குட் நைட் திரைப்படம் 2 மாதங்கள் தியேட்டரில் தொடர்ந்து ஓடியது. அதன் பிறகே ஓடிடியிலேயே வெளியானது. விஜய் ஆண்டனியின் இயக்கத்தில் நடிப்பில் இசையில் தயாரிப்பில் வந்த பிச்சைக்காரன் 2 படத்திற்கு சிலர் குறைந்த விமர்சனங்களை கொடுத்தாலும் லாபத்தை ஈட்டத் தவறவில்லை. கடைசியாக அண்மையில் வெளியான சைக்க த்ரில்லர் படமான போர் தொழில் அமைத்துள்ளது. சரத்குமார் – அசோக் செல்வன் காம்பிவில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் இன்னும் தியேட்டரில் சிறப்பாக ஓடிக் கொண்டுள்ளது.

இந்தப் பட்டியலில் விரைவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு – பஹத் பாசில் – உதயநிதி ஸ்டாலின் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மாமன்னன் படமும் இணையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏற்கனவே நப்ப விமர்சனத்தையும் வசூலையும் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. மேற்கண்ட படங்கள் ரீலீஸ் தேதியின் வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Most Popular