Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாசர்தார் 2வில் முக்கிய பிரபலங்களா ..?படப்பிடிப்பு எப்போது..?

சர்தார் 2வில் முக்கிய பிரபலங்களா ..?படப்பிடிப்பு எப்போது..?

நடிகர் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

பி .எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ராசிக் கண்ணா, ராஜிஷ விஜயன் , லைலா போன்ற பிரபலங்கள் நடித்திருந்தார்கள் .இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு இருந்த வரவேற்பை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எப்பொழுது வெளிவரும் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

- Advertisement -

அந்த கேள்விக்கு பதில் கூறும் வகையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது .வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி சென்னையில் சர்தார் 2 திரைப்படத்திற்கான பூஜை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்தின் கதாநாயகி வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் மிக முக்கியமான பிரபலங்கள் நடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் பி. எஸ் மித்ரன் தான் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த திரைப்படம் நடிகர் கார்த்திக்கு பிக் பட்ஜெட் திரைப்படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. சர்தார் திரைப்படத்தின் முதல் பாகமே ஒரு நல்ல கதைக்களமாக அமைந்திருப்பதை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் கதை எப்படி இருக்கப் போகிறது மற்றும் படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் இருந்து வருகிறது.

Most Popular