Saturday, April 20, 2024
- Advertisement -
Homeடாப் 102022ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு மண்ணைக் கவ்விய 5 தமிழ் திரைப்படங்கள்

2022ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு மண்ணைக் கவ்விய 5 தமிழ் திரைப்படங்கள்

2022ஆம் ஆண்டு முழுக்க முழுக்க சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. காரணம் 2 வருடங்களுக்குப் பின் எந்த வித கோவிட்/லாக்டவுன் தொல்லை இல்லாமல் திரையரங்கில் மக்கள் படத்தைக் கண்டுகளித்தனர். தமிழில் வெளிவந்த படங்களில் அதிகம் கொண்டாடப்பட்ட படம் என்றால் அது நிச்சயம் கமல் ஹாசன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வந்த விக்ரம் தான்.

- Advertisement -

டப்பிங்கில் வந்து பாக்ஸ் ஆபீஸை உலுக்கிய படம் கே.ஜி.எப் 2. எதிர்பாராமல் சிறப்பான திரைப்படமாக மாறியது சீதா ராமம் மற்றும் காந்தாரா. இவ்வாறு நாம் பட்டியலை நீடித்துக் கொண்டே போகலாம். இந்த வருடம் கோலிவுட் பெரிய நடிகர்களுக்கு பலமான அடி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு மோசமான திரைப்படமாக மாறிய 5 தமிழ் திரைப்படங்கள் பற்றிக் காண்போம்.

5. பிரின்ஸ்

தமிழ் சினிமாவில் இவரை வைத்துப் படம் பண்ணினால் நிச்சயம் 75 கோடிக்கு மேல் வசூல் செய்துவிடலாம் என்ற அளவுக்கு சிவகார்த்திகேயன் வளர்ந்துவிட்டார். அவரின் முந்தைய படங்கள் டாக்டர் மற்றும் டான் 100 கோடிகளுக்கு மேல் காலெக்ட் செய்து அமர்களப்படுத்தியது. ஆனால் அதற்கு அடுத்தப் படத்தில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் அவர்களுடன் கைகோர்த்தார். அனுதீப்பின் முந்தைய படமான ஜதி ரத்ணலு படத்தில் காமெடி காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வொர்க் அவுட் ஆகியது.

- Advertisement -

சிவகார்த்திகேயனும் காமெடியில் கலக்குவார் என்பதால் அனுதீப்புடன் சேரும்போது வயிறு குலுங்கி சிரிக்கலாம் என பார்வையாளர்கள் எண்ணினர். ஆனால் கிடைத்தது என்னவோ “ இது தான் எங்க அப்பா ! என்ன விட வயசுல மூத்தவர் ” போன்ற நமுத்துப்போன ஜோக் தான். தீபாவளி திருநாள் அன்று வெளியாகி ஏமாற்றம் அளித்தது.

- Advertisement -

4. பீஸ்ட்

ஃபேன் பாய் எனக் கூறிக்கொண்டு நெல்சன் எனும் இயக்குனர் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். அனைத்துப் பாடங்களிலும் டார்க் காமெடியை கையில் வைத்துக் கொண்டு நகர்வார் நெல்சன். இங்கும் அதே தான் செய்தார். ஆனால் பெரிய நடிகர் என்பதால் கூடுதலாக நல்ல காட்சிகளை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிரிஞ்சான படத்தைக் கொடுத்து சொதப்பிவிட்டார்.

படத்தில் ஒரே ஆறுதல் அனிருத் தான். அவர் தரமாக உருவாக்கிய பீஸ்ட் மோட் பாட்டையும் கிளைமேக்ஸ் ஜெட் காட்சியில் வைத்து உலகம் முழுக்க கேலி செய்யப்பட்டார் நெல்சன். அதிலும் இந்தப் படம் இந்திய சினிமாவில் உயரம் தொட்ட கே.ஜி.எப்புடன் கிளாஷ் செய்து பெரிய அடி வாங்கியது.

3. எதற்கும் துணிந்தவன்

குடும்பப் படங்கள் எடுப்பதில் வல்லவரான பாண்டிராஜ் சூர்யாவை வைத்து எடுத்த படத்தில் சற்று சருக்கினார். ஆபாச வீடியோக்களை பதிவு செய்யும் கும்பலிடம் இருந்து பெண்களை காக்கும் சிறப்பான காட்சி அற்புதமாக போய்க் கொண்டிருக்கும் போதில் திடீரென டூயட் பாட்டை வைத்துக் பார்வையாளர்களை கொன்றுவிட்டார். மொத்தமாக படத்தின் சாரத்தையே மாற்றிவிட்டார்.

முதல் காட்சியில் இமானின் தெறிக்கும் இசையில் சூர்யா இவ்வாறு சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வில்லன்களை வெட்டிவீசுவார். இதைத் தவிர படத்தில் ரசிக்க ஒன்றுமே இல்லை. தம்பி கார்த்திக்கு மட்டும் பிளாக்பஸ்டர் கடைக்குட்டி சிங்கம் ஆனால் அண்ணனுக்கு மட்கும் துணிந்தவனா என சூர்யா ரசிகர்கள் பாண்டியராஜிடம் கோபம் கொண்டுள்ளனர்.

2. வலிமை

இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த 3 ஆண்டுகளாக எங்கு சென்றாலும் தமிழ் சினிமாவைப் பற்றி அதிக பேசப்பட்ட வார்த்தை ‘ வலிமை அப்டேட் ’ தான். கோவிட் காலக் கட்டத்தில் போனி கபூரிடம் தொடங்கி இங்கிலாந்து வீரர் மொயின் அலி வரை அப்டேட் கேட்டு அலப்பறை செய்து விட்டனர் அஜித் ரசிகர்கள். இயக்குனர் ஹெச்.வினோத்தின் முந்தைய படங்களில் பிரமாதமாகவும் ஆழமான கருத்துகள் கொண்டதாகவும் அமைந்தது.

இம்முறை பெரிய நடிகர் அஜித் என்பதால் இன்னும் சற்று உழைப்பைச் சேர்த்து அமர்களப்படுத்துவார் என பெரிதும் நம்பினர். மேலும் வினோத்தின் வசனங்கள் எல்லாம் டாப் க்ளாசாக இருக்கும். ஆனால் அஜித் ரசிகர்களுக்கு அவர் தந்தது “ அம்மா சாப்டு ஆறு நாள் ஆச்சு ” எனும் சென்டிமென்ட் ஓவர்டோஸ் தான். இந்தியாவின் சிறந்த ஆக்க்ஷன் திரில்லர் என அறிமுகம் கொண்டு பின்னர் குடும்பங்கள் கொண்டாடும் காவியமாக மாறியது.

1. கோப்ரா

கடாரம் கொண்டான் தோல்விக்குப் பின் 4 ஆண்டுகள் கம்பேக் இல்லாமல் தவித்த சியான் விக்ரமை மீட்கப் போவது அஜய் ஞயானமுத்து தான் என பெரிதும் நம்பினர் ரசிகர்கள். இந்த ஆண்டு முதல் பாதியிலேயே மஹான் எனும் வெற்றிப் படத்தை ஓடிடி தளத்தில் தந்துவிட்டார் இருப்பினும் பெரிய ஸ்க்ரீனில் விக்ரமின் நல்ல படத்தைக் காண ஆவலுடன் இருந்தனர்.

படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பான இசையைக் கொடுத்தார். பல வேடங்களில் வந்து ஆதீரா பாடல் மேலும் ஹைப்பை ஏத்தியது. அத்தகு எதிர்பார்ப்புகளுக்கு இயக்குனர் பதிலுக்கு கொடுத்து ஹாலிவுட் கலவை. 3 மணி நேரம் குளறுபடி செய்து முதல் காட்சிக்கு அளித்தார். மிக நீளமாக இருப்பதாகக் கருதி அடுத்த நாளே 15 நிமிடங்கள் நீக்கினார், இருந்தும் எந்தப் புரோஜனமும் இல்லை. படத்தில் பல லாஜிக்குகள் இடிக்கிறது.

மேற்கண்ட அனைத்து படங்களும் விமர்சன ரீதியாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியன மட்டுமே.

Most Popular