சினிமா

தியேட்டர் ஸ்கிரீன் துணிவுக்கா வாரிசுக்கா என டாஸ் போட்டு முடிவு… ! அந்தமானில் நடந்து நாடகம்… !

Toss between thunivu and varisu for screen in andaman

துணிவு வாரிசு படத்தை ரசிகர்கள் வசமாக்க இன்னும் ஒரு நாளுக்கு குறைவான நேரம் தான் உள்ளது. இரு படங்களின் பிரீமியர் காட்சிகளும் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இன்று அதிகாலை 4 மணிக்கு போடப்பட்டது. விமர்சனங்கள் அனைத்தும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

தரமான ஆக்க்ஷன் த்ரில்லரான துணிவு படத்தில் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் அதிர வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். வாரிசு படத்தைப் பொறுத்தவரை சென்டிமென்ட் காட்சிகளில் விஜய் பின்னி இருக்கிறார் என்கின்றனர். குறை எனக் குறிப்பிட்டால் முதல் பாதி சற்று நீளமாக இருப்பதாக கூறினர், மற்ற படி முழுக்க முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸ்க்கான படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

துணிவு படக்குழுவினர் வரிசையாக புரோமோ வெளியிட்டு உற்சாமாகமான புரொமோஷன் செய்து வருகின்றனர். மறுபக்கம் ஏகப்பட்ட குழப்பங்கள் பின் முடிவு செய்யப்பட்ட தேதிகளில் இருந்து மாற்றி தத்தளித்து கிடக்கிறது வாரிசு. தமிழில் 11ஆம் தேதி கன்பார்ம், தெலுங்கில் 14ஆம் தேதிக்கு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது.

எப்போதும் விஜய் படத்திற்கு புரொமோஷன் வேளைகள் தீவிரமாக நடக்கு,m ஆனால் இம்முறை முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. மேலும் 2 நட்சத்திரங்கள் மோதுவதால் வாரிசு படத்திற்கு ஸ்கிரீன் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது, அதை எல்லாம் சமாளித்து திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ளது. வெளிநாடுகளிலும் இதே தேதியில் தான் வருகிறது.

Advertisement

அந்தமானில் நடந்த நாடகம்

அந்தமான் ஆனந்த் பாரடைஸ் தியேட்டரில் எப்படத்தைத் திரையிடலாம் என டாஸ் போடப்பட்டு முடிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. முதல் ஸ்கிரீனில் துணிவு மற்றும் இரண்டாவதில் வாரிசு என சமமாக இருந்தால் நிலையில் மீதமிருந்த மூன்றாவது ஸ்கிரீன் யாருக்குனு என்ற போட்டி இரு தரப்பு ரசிகர்களிடையே எழுந்தது.

தியேட்டர் நிர்வாகம் முன்னிலையில் நடத்தப்பட்ட டாசில் அஜித் ரசிகர்கள் வென்று 2 ஸ்கிரீன்களைத் தட்டிச் சென்றனர். இவ்வாறான நகைச்சுவை கலந்த நாடகம் நடப்பது இதுவே முதல் முறை, முக்கியமாக விஜய் – அஜித் மோதலில்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top