Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷா.. ஒரே விடியோவில் பதில்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷா.. ஒரே விடியோவில் பதில்

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தன்னுடைய 67வது படத்தை நடித்து வருகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி வருகிறது.
இந்தத் திரைப்படத்தின் லியோ என்ற பெயரை யாரும் எதிர்பாராத விதமாக ஒரு அழகான டீசரோடு வெளியிட்டது பட குழு.

அந்த மகிழ்ச்சியில் தத்தளித்து கொண்டிருந்த தளபதி ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இன்னும் ஒரு தகவலும் வெளிவந்தது. தற்பொழுது லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறுவதாகவும் அதற்காக நடிகை திரிஷா தளபதி விஜய் நடிகை பிரியா ஆனந்த் போன்ற பிரபலங்கள் தனி விமானத்தில் செல்வதை ரசிகர்கள் கண்டறிந்து தகவலை வெளியிட்டார்கள் தளபதி ரசிகர்கள்.

- Advertisement -

மேலும் இந்தத் திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பிரபலங்களும் நடிக்க இருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க இருக்கிறார். தளபதி விஜயின் நடனமும் இசையமைப்பாளர் அனிருத் இசையும் ரசிகர்களால் பெரும் அளவில் கொண்டாடப்படும் காம்போ ஆகும். இதை காண ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதையெல்லாம் ஒருபுறம் இருக்க படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்ற நடிகை திரிஷா தற்பொழுது சென்னைக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது. மேலும் அவர் சென்னை வந்ததற்கு திரிஷாவிற்கு  காஷ்மீரின் குளிர் தாங்க முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டது என்றும் ஆதாரம் இல்லாத பல காரணங்கள் கூறப்பட்டது. இன்னும் ஒரு படி மேலே சென்று சிலர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடைய திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை .

அதனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளம் கொண்ட திரிஷா இதை விரும்பாமல் வந்திருப்பார் என்றெல்லாம் பேசப்பட்டது.
இந்த நிலையில் திரிஷா மீண்டும் காஷ்மீருக்கு சென்றிருக்கிறார். காஷ்மீர் நோக்கி விமானத்தில் சென்ற வீடியோவை திரிஷா தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள திரிஷா தற்போது மீண்டும் படக்குழுவில் இணைய உள்ளார்.

Most Popular