சமீபத்தில் மன்சூர் அலி கான் நடிகை த்ரிஷாவை தப்பான பார்வையில் பேசியது கோர்ட் கேஸ் என பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. அதனை விட பெரிய சிக்கல் மற்றும் பழி நடிகை த்ரிஷாவின் மேல் அரசியல்வாதி ஏ.வி.ராஜு சாட்டியுள்ளார்.
அரசியல்வாதி என்றால் என்னவேனாலும் சொல்லாலாம் செய்யலாம் என்ற நோக்கில் அவரது பேச்சு இருந்ததாக சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இன்று பேட்டியில் ஏ.வி.ராஜு கூறியதாவது, “ சென்னை கூவத்தூர் ரெசார்ட்டில் அதிமுக நிர்வாகிகள் அவர்கள் கேட்கும் நடிகைகளை வரவழைத்து அனுபவித்து அனுப்பிவிடுவர். ”
“ திரிஷா உட்பட பல நடிகைகளை அதற்காக அவர்களுக்கு 25 லட்சம் கொடுப்பார். இதனை நடிகர் கருணாஸ் தான் ஏற்பாடு செய்வார். ” என்றார். காலையில் வெளியான இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது.
இது குறித்து த்ரிஷாவுக்காக இயக்குனர் சேரன், “ வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன். ” என குரல் கொடுத்தார்.
இன்று மாலை சம்மந்தப்பட்ட நடிகை த்ரிஷா, “ மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற எந்த அளவுக்குக் கீழ்த்தரமாக செல்லும் மனிதர்களைப் பார்க்கும் போது அருவெறுப்பாக உள்ளது. இவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். ” என மிகக் கோமாக பதிவிட்டுள்ளார். மேலும் தன் வழக்கறிஞர்களை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
இத்தனை எதிர்ப்புகளை பெற்ற ராஜு இன்று மாலையே செய்தியாளர்கள் சந்திப்பில், “ த்ரிஷா போன்ற பெண்களைத் தான் சொன்னேன், த்ரிஷாவை அல்ல. அவரை அவமானப்படுத்துவது நோக்கம் அல்ல. மன்னித்து விடுங்கள். ” என தன் தவறான வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.