Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாமலையாள தயாரிப்பாளருடன் திருமணம்.. மெளனம் களைத்துள்ள திரிஷா.. !

மலையாள தயாரிப்பாளருடன் திருமணம்.. மெளனம் களைத்துள்ள திரிஷா.. !

தென்னிந்திய சினிமாவின் ராணி எனும் பெயரைக் கொண்டவர் திரிஷா. அண்மையில் திரிஷாவின் திருமண செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மலையாள தயாரிப்பாளர் ஒருவரை அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறுகின்றனர். அவர்களுக்கு திரிஷா தன் டிவிட்டர் பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

பெரிய இடைவேளைக்குப் பின் திரிஷா மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 & 2, லியோ என மூன்று பெரிய படங்கள் ஒரு ஆண்டு இடைவேளைக்குள் நடித்துள்ளார். இது தவிர்த்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தற்போது திரிஷா மலையாள சினிமாவுக்குள் நுழைந்ததை அடுத்து அங்கு ஓர் தயாரிப்பாளரை அவர் விரைவில் திருமணம் செய்து கொள்கிறார் என வரும் செய்திகளுக்கு திரிஷா முற்றுப் புள்ளி வைத்துள்ளார். 40 வயதாகும் திரிஷா எப்போது திருமணம் செய்து கொள்வார் எனும் கேள்விகளும் உலாவி வருகின்றன.

- Advertisement -

அதனால் உடனே சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பத் துவங்கிவிட்டார்கள். இதற்கு திரிஷா லியோ பட போஸ்டர் பாணியில் ரிப்ளை செய்துள்ளார். தன் டிவிட்டர் பக்கத்தில், “ அமைதியாக இருங்கள்.. வதந்திகளை பரப்பாதீர்கள் ( கீப் காம் & ஸ்டாப் ரூமரிங் ) ” எனப் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

லியோ படக்குழு தற்போது “ கீப் காம் ” எனும் வசனத்தில் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. அந்த ஸ்டைலில் வதந்திகளுக்கு ரிப்ளை செய்துள்ளார். அண்மையில் திரிஷா முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழைத் தவிர மலையாளத்தில் ஓர் பெரிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். டோவினோ தாமஸ், திரிஷா முன்னிலை நடிகர்களாக நடிக்க அனாஸ் கான் & அகில் பால் இணைந்து இயக்கும் படம் ‘ ஐடென்டிட்டி ’ மேலும் திரிஷா தனியாக நடித்த படங்களும் ரீலீசுக்கு காத்திருக்கிறது.

Most Popular