Thursday, April 18, 2024
- Advertisement -
Homeசினிமா14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணையும் த்ரிஷா ! தளபதி 67 குறித்து லோகேஷ்...

14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணையும் த்ரிஷா ! தளபதி 67 குறித்து லோகேஷ் & கோ !

தன் சிறந்த நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கட்டி இழுதவர் த்ரிஷா. 1999ஆம் ஆண்டு ஜோடி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த பின் 2002ஆம் சூர்யாவுடன் முதல் முறை கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தார். பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்த த்ரிஷா தற்போது பெரிதாக நடிப்பதில் ஆர்வம் செலுத்தவில்லை. பல காலத்திற்கு பின் அவர் நடித்த படம் திரையரங்கில் அடுத்த மாதம் 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

- Advertisement -

மணிரத்னம் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவி கதாபாத்திரத்தில் தன் நடிப்பாற்றலை வெளிகாட்டியுள்ளார் த்ரிஷா. இந்த படத்தை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் பலர் இதற்காக காத்திருக்கின்றனர்.

40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே இளமையோடு தான் இருக்கிறார். 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் பரவி வருகின்றன. லோகேஷ் கனகராஜ் – விஜய் ஜோடியில் அடுத்து வரவிருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷாவை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ஆனால் இது பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. சொல்லப் போனால் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பதையே இன்னும் அவர்கள் சொல்லவில்லை.

- Advertisement -

விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக முன்னர் தெரிவித்தனர். ஆனால் தற்போது த்ரிஷா தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என முடிவு செய்து அவரை அனுகவுள்ளதாக கூறுகின்றனர். த்ரிஷா – விஜய் ஜோடி ரசிகர்களுக்கு எப்போதும் ஃபேவரைட் தான். கில்லி திரைப்படத்தில் ஆரம்பித்தது திருப்பாச்சி, ஆதி, குருவி என மொத்தம் 4 முறை இணைந்து நடித்துள்ளனர். மீண்டும் பல ஆண்டுகள் கழித்து அவர்கள் இணைந்து நடித்தால் நிச்சயம் பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -

தளபதி 67 படம் குறித்த அறிவிப்பை நோக்கி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் எங்கு சென்றாலும் அவரிடம் இதைப் பற்றியே கேட்கிறார்கள். செப்டம்பர் மாத இறுதிக்குள் வாரிசு படம் நிறைவு பெறவுள்ளது. உடனே அதற்கு அடுத்த மாதம் இந்த படத்தின் வேலைகளை விஜய் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்தில் புது விஜயை ரசிகர்களுக்கு அளித்து அவர்களின் அளவுகடந்த அன்பை பெற்றுகொண்டுள்ள லோகேஷ் கனகராஜிடம் இம்முறை கூடுதலாக எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் அவர் பூர்த்தியும் செய்வார்.

Most Popular