ஜெயிலர் திரைப்படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது தன் மகளின் இயக்கத்தில் சிறப்பு கதாபாத்திரமாக நடித்திருக்கும் இந்த லால் சலாம் திரைப்படம் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தின் உடைய டீசர் ஒரு மாதத்திற்கு முன்பும் வெளியானது. இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது .
ஆனால் சூப்பர் ஸ்டார் திரைப்படம் என்று மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் இந்த நிலையில் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை. வருகின்ற பொங்கல் அன்று திரைப்படத்தை வெளியிடலாம் என்று தான் முதலில் கூறியிருந்தார்கள்.
ஆனால் தற்பொழுது வருகின்ற பொங்கல் அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்கள் வெளியிடப்பட இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இதை காரணமாக வைத்து லால் சலாம் திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்கள் படக்குழுவீர்கள்.
சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இதை சூப்பர் ஸ்டார் நடித்த திரைப்படம் என்று தான் பலரும் கூறி வருகிறார்கள் .இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயங்கி பொங்கல் ரைஸை விட்டு விலகி விட்டார்கள் லால் சலாம் பட குழுவினர்கள்.
தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிப்பில் வர இருக்கும் இந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்புடன் கூடிய திரைப்படங்கள் என்பதால் கூட இந்த முடிவிற்கு வந்திருக்கலாம் ஆனால் தற்பொழுது வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி லால் சலாம் திரைப்படத்தை வெளியிடுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மகளிடம் கூறியதாக சில தகவல்கள் வெளியானது.
அதிலும் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் ,அசோக் செல்வன் நடிப்பில் ப்ளூ ஸ்டார்,டிமான்டி காலனி 2 மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ரெபெல் என்ற திரைப்படங்கள் எல்லாம் வெளிவர இருக்கிறது. இதன் காரணங்களினால் வருகின்ற 26 ஆம் தேதியும் இந்த திரைப்படத்தை வெளியிடப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது.
திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு வெளியிட ஒரு நல்ல தேதி கிடைக்காமல் அல்லல்படம் சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தை எண்ணி ரசிகர்கள் பயம் கொள்கிறார்கள்
ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் நடித்த கோச்சடையான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது .இதற்கு கதை எழுதியது கே எஸ் ரவிக்குமார் என்றாலும் இயக்கியது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்பதால் இதையும் அதே கண்ணோட்டத்தில் தான் தற்பொழுது ரசிகர்கள் பார்க்கிறார்கள்.
இப்படி நாட்களை கடத்திக் கொண்டே போனால் அடுத்தது பிப்ரவரி ,மார்ச் போன்ற மாதங்களில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கிவிடும் .இதனால் திரையரங்குகளில் கூட்டமும் குறைந்து விடும். இது ஒரு நல்ல திரைப்படம் வெளியிடுவதற்கு சரியான நேரமும் இல்லை .
லால் சலாம் திரைப்படத்தை எப்பொழுது வெளியிடுவார்கள் என்ற ஆர்வத்தை விட பயம் தான் தற்பொழுது ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது .ஜெயிலரின் வெற்றியை லால் சலாம் ஒருபோதும் குறைத்து விடக்கூடாது என்பதை ரசிகர்களின் எண்ணம்.