சினிமா

2 நாளில் 60 கோடி ரூபாய் வந்தது எப்படி ? வாரிசு வசூல் குறித்து நிபுணர்கள் அளித்த விளக்கம்

தளபதி விஜய் நடித்து கடந்த ஜனவரி பதினொன்றாம் தேதி ரிலீசான வாரிசு திரைப்படம் முதல் 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பொங்கல் பந்தயத்தில் வாரிசு திரைப்படம் வெற்றி பெற்றதாக அவர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடினர். இந்த நிலையில் ஐந்து நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்த படம் அடுத்த இரண்டு நாட்களில் எப்படி 60 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பினர்.

Advertisement

மேலும் வாரிசு பட குழு பொய் தகவல் கூறி விட்டதாக பலரும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் வாரிசு பட குழு உண்மையான வசூல் நிலவரத்தை தான் வெளியிட்டு இருப்பதாக திரைப்பட வணிக நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது பொங்கல் முடிந்து மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் அன்று தமிழகத்தில் வழக்கத்தை விட திரையரங்கில் கூட்டம் அலைமோதியதாகவும், இதனால் வாரிசு படத்திற்கு கூடுதலான காட்சிகள் கூடுதலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாகும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குடும்ப ரசிகர்கள் பெருமளவில் படத்தைப் பார்த்ததால் பல்வேறு திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனைத்து காட்சிகளும் பதிவு ஆனதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் திங்கள் மற்றும் செவ்வாயில் தமிழகத்தில் இருந்து தலா 20 கோடி என மொத்தம் 40 கோடி ரூபாய் வாரிசு படத்திற்கு கிடைத்திருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

மேலும் ஆந்திரா,ஹிந்தி ,கேரளா கர்நாடகா, போன்ற வெளி மாநிலங்களிலும் சிங்கப்பூர், மலேசியா,துபாய்,அமெரிக்கா, கனடா ,பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் வாரிசு திரைப்படம் கண்டிப்பாக இரண்டு நாட்களில் மொத்தம் 60 கோடி ரூபாய் வசூல் கிடைத்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு தனியார் திரைத்துறை அமைப்பு கணித்த வசூல் தொகையும் வாரிசு பட குழு வெளியிட்டுள்ள வசூல் தொகையும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதாகவும் திரைத்துறை வணிக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விசுவாசம், பேட்டை திரைப்படம் ரிலீஸ் ஆனபோது பேட்ட திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் கடந்து விட்டதாக அறிவித்தவுடன் விசுவாசம் பட குழு 125 கோடி என்று போஸ்டஎ போட்டனர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று திரைத்துறை நிபுணர்கள் கூறினர். ஆனால் வாரிசு பட குழு இதுபோன்று கூடுதல் தொகையை கூறாமல் சரியான தொகையை கூறி இருப்பதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் திங்கள் செவ்வாய்க்கிழமையில் தமிழகம் முழுவதும் டிக்கெட் நியூ, புக் மை சோ போன்ற தலங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த விவரங்களை பார்த்தாலே இது சாத்தியமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் வேலை நாளான புதன்கிழமையிலும் வாரிசு திரைப்படம் நல்ல வசூலை தமிழகம் முழுவதும் பெற்றிருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே போன்று நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை இந்த ஏழு நாட்களில் நிகழ்த்திருப்பதாகவும், இதுவரை இல்லாத அஜித் படங்கள் காணாத வசூலை  துணிவு படம் பெற்று இருப்பதாகவும் திரைத்துறை வணிக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top