தமிழ் சினிமாவில் சமூக வலைத்தளத்தில் நடிகர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். சொல்லப்போனால் ட்விட்டரை சுற்றி தான் தமிழக சினிமாவே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதேனும் படத்தின் அறிவிப்பு படம் தொடர்பான புகைப்படங்கள் தகவல்கள் எல்லாம் ட்விட்டரில் தான் வரும்.
மேலும் ரசிகர்களும் தங்களது கெத்தை நிரூபிக்க அவர்களுக்கு பிடித்தமான நடிகர்களை புகழ்ந்து தேசிய அளவில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்வது வழக்கம். இந்த நிலையில் நடிகர்கள் நடிகைகள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கிறார்கள். அவர்கள் தான் என்று அடையாளம் காட்டிக் கொள்ள ப்ளூ டிக் அவர்களுக்கு வழங்கப்படும்.
இதன் மூலம் பிரபலங்கள் பெயரில் போலி கணக்கு தொடங்குவது முற்றிலும் தடுக்கப்படும். ஆனால் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதை அடுத்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். இதில் ஒரு பகுதியாக மாதம் 900 ரூபாய் செலுத்தினால் மட்டுமே ப்ளூ டிக் என்ற உத்தரவை கொண்டு வந்தார்.
இதில் பிரபலங்களும் கண்டிப்பாக 900 ரூபாய் செலுத்தினால் மட்டுமே ப்ளூ டிக் கிடைக்கும் என்று அவர் அறிவித்திருந்தார். இந்த மாற்றம் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதை அடுத்து இன்று பல்வேறு பயனாட்டாளர்களும் பிரபலங்களும் தங்களுடைய ப்ளு டிக்கை இழந்தார்கள். நடிகர் விஜய், சூர்யா, ரஜினி, கிரிக்கெட் வீரர்கள் டோனி, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற பிரபலங்கள் தங்களுடைய ப்ளூ டிக்கை இழந்தனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தற்போது ப்ளு டிக் இல்லாத காரணத்தால் நட்சத்திரங்கள் பெயரில் போலியான கணக்கை தொடங்கி விஷமத்தன கருத்துக்களை கூற வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர். எனினும் இந்த முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க் திட்டவட்டமாக கூறியுள்ளார்.