Saturday, October 26, 2024
- Advertisement -
Homeசினிமாஇது என்னப்பா சோழர்களுக்கு வந்த சோகம்.. ! ஜெயம் ரவி மற்றும் திரிஷாவின் அதிகாரபூர்வ கணக்கை...

இது என்னப்பா சோழர்களுக்கு வந்த சோகம்.. ! ஜெயம் ரவி மற்றும் திரிஷாவின் அதிகாரபூர்வ கணக்கை பறித்த டிவிட்டர் நிறுவனம்.. !

இயக்குனர் மணிரத்னம் தலைமையில் மிகப் பெரிய படையுடன் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் 10 நாட்களில் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு வந்த முதல் பாகம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

ஊமைக் கிழவி யார் ? நந்தினி சோழ தேசத்தை வெல்வாளா ? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இரண்டாம் பாகத்தில் பதில் கிடைக்கும். இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் சில வாரங்களுக்கு முன் வெளியாகியது, எதிர்பார்த்தது போல நல்ல வரவேற்பையும் பெற்றது. அதோடு படத்தில் உள்ள அனைத்து 7 பாட்டுகளும் ரீலீஸ் ஆகிவிட்டது.

தற்போது படக்குழு புரொமோஷன் வேளைகளில் மிகத் தீவிரமாக உள்ளது. அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் மைதானத்தில் பொன்னியின் செல்வன் தீம் வெளியிடப்பட்டது. இத்துடன் ரீலீஸ் தேதிக்கு முன் வரை இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் புரொமோஷன் டூர் செல்கிறது படக்குழு.

- Advertisement -

ஏப்ரல் 15 – சென்னை ; ஏப்ரல் 16 – கோயம்பத்தூர் ; ஏப்ரல் 17 – சென்னை ; ஏப்ரல் 18 – டெல்லி ; ஏப்ரல் 20 – கொச்சி ; ஏப்ரல் 22 – பெங்களூர் ; ஏப்ரல் 23 – ஹைதராபாத் ; ஏப்ரல் 24 – மும்பை ; ஏப்ரல் 26 – திருச்சி ; ஏப்ரல் 27 – சென்னை.

- Advertisement -

இந்த புரொமோஷன் தவிர்த்து வித்தியாசமாக மக்களைக் கவர சமூக வலைதளங்களில் நடிகர்கள் அவரது பெயர்களை கதாபாத்திரத்தின் பெயருக்கு மாட்டியுள்ளனர். இது முதல் பாகத்தின் வெளியீட்டின் போதே பின்பற்றப்பட்டது. டிவிட்டர் பக்கங்களில் வந்தியத்தேவனான கார்த்தி மற்றும் குந்தவையாக வரும் திரிஷா இருவரும் மாறி மாறி டுவீட்கள் பதிவிட்டு புரொமோஷன் செய்தனர்.

இந்த டெக்னிக்கல் தான் புதிய சிக்கல். டிவிட்டரில் ஜெயம் ரவி மற்றும் திரிஷாவின் ப்ளூ டிக் பெயரை மாற்றியதால் பறிக்கப்பட்டுள்ளது. அருண்மொழி வர்மன் மற்றும் குந்தவை என்ற பெயர்களுக்கு மாறியுள்ளதாக கூறி டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக அவர்களது அதிகாரபூர்வ டிக் மார்க்கை நீக்கியுள்ளது. இந்த பெயர் மாற்றங்களை டிவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியப் பின் மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்படும் எனக் கூறுகின்றனர்.

Most Popular