Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் என் மீது கோபமாக இருந்தார்- உதயநதி ஸ்டாலின் பளீச் பேட்டி

விஜய் என் மீது கோபமாக இருந்தார்- உதயநதி ஸ்டாலின் பளீச் பேட்டி

வருகின்ற 28ஆம் தேதி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ரெட் ஜெய்ன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளரானார் உதயநிதி ஸ்டாலின். இவர் முதலில் தளபதி விஜய் நடித்த குருவி திரைப்படத்தை முதன் முதலில் தயாரித்தார். இது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

- Advertisement -

இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து ஆதவன் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.இந்த திரைப்படத்தில் கடைசி ஒரு ஐந்து நிமிடத்தில் இவர் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஏழாம் அறிவு, மன்மதன் போன்ற திரைப்படங்களை தயாரித்தார்.

பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்கு அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். தமிழ் திரைப்படத்தில் இவர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு பெற்று தந்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, சரவணன் இருக்க பயமேன், கெத்து போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த திரைப்படங்கள் எதுவும் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தரவில்லை. ஆனால் இவர் நடித்த மனிதன், சைக்கோ, நிமிர் இவருக்கு நல்ல பெயரை பெற்று.

- Advertisement -

அரசியலில் உதயநதி

இப்படி நடிகனாக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவாக ஆனார். உதயநிதி ஸ்டாலின் இதற்குப் பிறகு இவருக்கு விளையாட்டு துறை அமைச்சராக பதவி உயர்வும் கிடைத்தது. அரசியலில் ஒரு அமைச்சராக இருப்பவருக்கு நடிப்பது அழகல்ல என்று முடிவு செய்த உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கடைசி படமாக மாமன்னன் திரைப்படத்தை தேர்வு செய்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் வைத்து நல்ல கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்.

திரைப்படத்தின் மீது அவர் எதிர்பார்த்தது போல் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு இருக்கிறது. தற்பொழுது திரைப்படம் வெளியிடுவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் பிரமோஷன் பணி விரைவாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஒரு பேட்டியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தளபதி விஜய் பற்றி பேசி இருந்தார் அவர் பேசிய அந்த பேட்டி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

விஜய் vs உதயநதி

தளபதி விஜய் எளிதில் எவருடனும் நண்பராக்கி விடமாட்டார். அப்படி அவர் நண்பர் ஆனால் அவருடன் நெருங்கி பழகுவார். அந்த வகையில் நானும் நடிகர் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். குருவி திரைப்படத்தின் போது எங்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு ஒரு சிலர் என்னைப் பற்றி அவரிடமும் அவரைப் பற்றி என்னிடமும் தவறாக கூறி வந்தார்கள். இதன் காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்து விட்டோம். பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து நேரில் பேசிய பிறகு மீண்டும் நண்பர்களாகி விட்டோம் என்று கூறியிருந்தார்.

Most Popular