Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாமாமன்னன் படத்தில் நடிக்க இருந்த சிக்கல்.. உதயநிதி உதவியது எப்படி? வடிவேலு பேச்சு

மாமன்னன் படத்தில் நடிக்க இருந்த சிக்கல்.. உதயநிதி உதவியது எப்படி? வடிவேலு பேச்சு

ஜூன் மாதம் 29ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் மாமன்னன் இது ரசிகன் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் நடிகர் வடிவேலு மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதுதான்.

- Advertisement -

மேலும் இந்த படத்தின் வில்லனாக பகத் பாசில் நடிக்கிறார். ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் தான் நடிக்க வந்தது எப்படி என்பது குறித்து நடிகர் வடிவேலு குறித்த பேட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கதையை கேளுங்க

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் பேசினார். இயக்குனர் நீங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறார். நான் அவரை நாளை வர சொல்கிறேன். அவரிடம் கதை கேளுங்கள், பிடித்தால் அதை பண்ணலாம். இல்லையென்றால் வேண்டாம் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் பரியேறும் பெருமாள், கர்ணன் படம் எல்லாம் பார்த்தீர்களா என்று கேட்டார். நான் இல்லை நீங்கள் வரச் சொல்லுங்கள். நான் அந்த படத்தை பார்த்து விடுகிறேன் என்று கூறினேன். அப்போது பரியேறும் பெருமாள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குனரிடம் கதை கேட்ட உடனே ஓகே என்று சொல்லிவிட்டேன்.

- Advertisement -

குருவிக்கு நோ

ரெட் ஜெயின்ஸ் நிறுவனம் குருவி திரைப்படத்தை தயாரித்த போது என்னிடம் தான் கதை சொன்னார்கள். அப்போது நான் உதயநிதியிடம் இந்தப் படத்தில் எனக்கு அவ்வளவு ஆக வேலை இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை. ஓகே என்று கூறிவிட்டார். அதன் பிறகு ரவிக்குமார் சார் படம் ஒன்று இருக்கிறது அதில் நடிக்கிறீர்களா என்று கேட்டார்.

நான் கதையை கேட்காமல் ஓகே என்று சொல்லிவிட்டேன். அதற்கு காரணம் முதல் படத்தை தவற விட்டதால் இந்த முடிவை எடுத்தேன். அப்போது உதயநிதி ஸ்டாலினை கடைசி சீனில் நடிக்க நானும் ரவிக்குமார் சார் தான் வற்புறுத்தினோம். அதன் பிறகு இந்த படத்தில் எனக்கு கதை பிடித்து விட்டது. ஆனால் ஒரு சிக்கல் இருந்தது.

உதயநிதி பேசினார்

நாய் சேகர் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய இரண்டு படங்களை மட்டும் தான் நான் நடிக்க வேண்டும். இந்த சமயத்தில் நான் வேறு எந்த படத்திலும் கமிட் ஆக கூடாது என தயாரிப்பாளர் சுபாஸ்கரன் என்னிடம் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த சிக்கலை நான் உதயநிதி ஸ்டாலினிடம் சொன்னேன்.

அவர் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி நேராக சுபாஷ்கரணுடன் பேசி, வடிவேல் சார் நடிக்க வேண்டும். கொஞ்சம் அனுமதி கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு அவரும் ஓகே சொல்லிவிட்டார். உதயநிதி ஸ்டாலின் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் படத்தில் நடியுங்கள் என்று கூறலாம்.ஆனால் அவர் அதை எல்லாம் செய்ய மாட்டார் பழகுவதற்கு இனிமையான நபர்.

Most Popular