தமிழ் சினிமாவில் கடந்த 11 ஆண்டுகளாக நடித்து வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின். அரசியல் பின்புலம் இருந்தாலும் தொடக்கத்தில் கமர்சியல் காமெடி திரைப்படத்தில் தான் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களுக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார். அவர் தற்போது நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.
நடிகர் வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படம் நடித்திருந்தார்கள் அடிதட்டு மக்களின் வலியை தொடர்ந்து பேசும் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கினார் ரிசர்வ் தொகுதியில் நின்று வெற்றி பெறும் எம்எல்ஏ எவ்வாறு நடத்தப்படுகிறார் சமூக நீதி அவருக்கு என்ன பயனை கொடுத்தது என்பதை பேசும் இந்த திரைப்படம் அரசியல் கட்சிகளையும் மறைமுகமாக விமர்சித்து இருக்கிறது.
மேலும் வடிவேலுவின் நடிப்பும் இந்த படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது. தற்போது இந்த படம் வெளியாகி ஐந்து நாட்களில் 33 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாள் வியாழக்கிழமை 8. 8 கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமை 4.5 கோடி ரூபாயும் ,சனிக்கிழமை, 7.1 கோடி ரூபாயாகவும் ஞாயிற்றுக்கிழமை 8.1 கோடி ரூபாயாகவும் திங்கட்கிழமை நான்கு கோடி ரூபாயும் என மொத்தம் 32 கோடி ரூபாயை மாமன்னன் திரைப்படம் வசூல் செய்திருக்கிறது.
இதன் மூலம் தயாரிப்பாளருக்கு 20 கோடி ரூபாய் ஷேர் கிடைத்திருக்கிறது. இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது திரைப்படம் என்ற பெருமையை உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் சந்தானம் ஆகியோர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியது .இந்த திரைப்படம் 20 கோடி ரூபாய்க்கு மேல் தயாரிப்பாளருக்கு ஷேர் ஆக கிடைத்தது.
அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமான மாமன்னன் தான் இத்தகைய மைல் கல்லை கட்டி இருக்கிறது. இதனால் வெற்றியுடன் சினிமா உலகத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் மீண்டும் அதே வெற்றியுடன் திரைப்படத் துறையை விட்டு விலகுகிறார்.