Saturday, July 27, 2024
- Advertisement -
Homeசினிமாஒரு வருசமா பொத்தி வச்சி இருந்த ரகசியம்..! ஒரே டிவிட்டில் போட்டு உடைத்த உதயநிதி ஸ்டாலின்

ஒரு வருசமா பொத்தி வச்சி இருந்த ரகசியம்..! ஒரே டிவிட்டில் போட்டு உடைத்த உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஒரே மில்லியன் டாலர் கேள்வி என்றால் லியோ திரைப்படம், விக்ரம், கைதி படத்தின் தொடர்ச்சியா இல்லையா என்பதுதான். ஆங்கிலப் படத்தில் வருவது போல் எல் சி யு என்ற ஒரு யுத்தியை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களை ஒரே கதை களத்தில் வைத்து வருகிறார்.

- Advertisement -

இதனால் லியோ திரைப்படத்தில் கமல்ஹாசன் வருவாரா சூர்யா இடம்பெறுவாரா என்றெல்லாம் ரசிகர்கள் பகல் கனவு கண்டு வந்தனர். ஆனால் சூர்யா கமல் போன்ற நடிகர்கள் எல்லாம் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பது ஏற்கனவே உறுதி ஆகிவிட்டது.

எனினும் லியோ தொடர்பான கதைக்களம் விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ எல்.சி.யூவில் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து கடந்த ஒரு வருடமாக ரகசியமாக வைத்து வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை இன்று பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோ திரைப்படத்தை பாராட்டி ஒன்று போட்டு இருந்தார்.நடிகர் விஜயின் நடிப்பையும் லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கிய விதத்தையும் மனம் மகிழ்ந்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் இறுதியில் இந்த படம் எல் சி யு என்று போட்டு டிவிட்டை முடித்து விட்டார்.

- Advertisement -

இதை பார்த்தவுடன் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். ஏனென்றால் லியோ எல் சி யூவில் இடம் பெறுகிறது என்றால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதுதான் திரை துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

எனும் லியோ எல் சிவில் இருக்கிறதா இல்லையா என்பதை உதயநிதி ஸ்டாலின் போட்டு உடைத்ததன் மூலம் ரகசியம் போய்விட்டதாக சில ரசிகர்கள் வேதனை தெரிவித்து இருந்தார்கள்.

தாங்களே படத்தை பார்த்து தெரிந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஏன் அவசரப்பட்டு கூறினார் என்றும் சில ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். எனினும் படம் நன்றாக இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது இங்கு கவனிக்கத்தக்கது.

Most Popular