Saturday, May 18, 2024
- Advertisement -
Homeசினிமாஉதயநிதி மனைவி இயக்கத்தில் ஜெயம் ரவி,..அடுத்தடுத்து படங்களால் பிஸி

உதயநிதி மனைவி இயக்கத்தில் ஜெயம் ரவி,..அடுத்தடுத்து படங்களால் பிஸி

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாக நடித்த பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு தனி இடம் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு நல்ல அபிப்ராயமும் உள்ளது. தலைகனம் இல்லாத ஒரு நல்ல நடிகனாக இவரை பார்த்து வந்தவர்கள். தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு மேலும் ஒரு படி உயர்த்தி கொண்டாடி வருகிறார்கள்.

இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு இவர் நடித்த அகிலன் என்ற திரைப்படம் ரசிகர்களிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அது வெற்றி காணவில்லை. சற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்று தந்தது.பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த மாதம் வெளிவந்த நிலையில் அதைத்தொடர்ந்து தற்பொழுது100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர் ஜெயம் ரவி தற்பொழுது புதுமுக இயக்குனரான புவனேஷ் என்ற இயக்குனரின் இயக்கத்தில்  ஜீனி என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தை மேலும் இந்த திரைப்படத்தை வேல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த ஜெனி திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கும் தயாராகி விட்டார்.

- Advertisement -

வணக்கம் சென்னை,  காளி போன்ற திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அடுத்த படத்தை நடிக்க இருக்கிறார் .நடிகர் ஜெயம் ரவிக்கு இந்த திரைப்படம் முப்பத்தி மூன்றாவது திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை நித்யா மேனன் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த திரைப்படம் முழுவதுமே காதலை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது .

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் மேலும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பதால் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் தான் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடிகர் ஜெயம்ரவி நடித்துக் கொண்டிருக்கும் Gene திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் இந்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்புத் தொடங்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.இந்த திரைப்படத்தை இயக்குனர்  உதயநிதியின் ரெட் ஜெயின் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களும் திரைப்படத்தின் பெயரும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular