சினிமா

டபுள் ட்ரீட் : வாரிசு படப்பிடிப்பு எப்போது முடியும் ? தளபதி 67 எப்போது ? அடுத்தடுத்து வெளியான அப்டேட்

Vaarisu and Thalapathy 67 update

தளபதி விஜயின் வாரிசு மற்றும் தளபதி 67 என 2 திரைப்படங்களின் அப்டேட்கள் தற்போது வெளியாகி உள்ளன.

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் 66ஆவது படமான வாரிசு திரைப்படம் ஹைதராபாத்தில் முழு வீச்சில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை வம்சி இயக்குகிறார். இதற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சரத்குமார், ராதிகா சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி குணச்சித்திர நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இரண்டு கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இது ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் 67 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதம் இறுதி வாரம் சென்னையில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த படத்தின் எழுத்து வேலைகளை இன்னும் நுணுக்கமாக செய்ய வேண்டும் என்பதால் கூடுதல் நேரம் வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் விஜய் இடம் முறையிட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன்படி, விஜய் லோகேஷ் கனகராஜின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் சூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் தள்ளிப் போகலாம் என்றும் மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த இரண்டு படங்களுக்கும் நடுவே, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றமாக ஒருசில காட்சிகளில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் முன்னமே வெளிவந்தன. இதற்காக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும், அதற்கான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட இருப்பதாகவும் படக்குழுவினரிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே சுமார் 200 கோடி வரை விற்பனையாகி உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட தகவலால் படக்குழுவினர் மட்டுமல்லாது ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இப்படத்தினை அமேசான் பிரைம் நிறுவனம் சுமார் 100 கோடிகள் கொடுத்து ஓடிடி உரிமத்தை வாங்கியுள்ளது. ஹிந்தி டப்பிங் உரிமம் 40 கோடிக்கும், சேட்டிலைட் உரிமம் சுமார் 65 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரிசு திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும், இதற்கான போஸ்டர்கள் கடந்த மாதம் விஜய் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top