சினிமா

வாரிசு படம் ரிலீசுக்கு முன்னரே இத்தனை கோடிகளுக்கு விற்பனையா ? மீண்டும் மீண்டும் மாஸ் காட்டும் வசூல் மன்னன் விஜய் !

Vaarisu

நடிகர் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் வாரிசு திரைப்படம் ரிலீசுக்கு முன்பாக எத்தனை கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்கள் சமீபத்தில் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் 66 ஆவது திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், ராதிகா, பிரபு, பிரகாஷ்ராஜ், சம்யுக்தா போன்ற முன்னணி கதாபாத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். தொடர்ந்து மாஸ் கமர்சியல் படங்களை கொடுத்து வந்த நடிகர் விஜய்க்கு இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என அதன் இயக்குனர் பேட்டி அளித்திருந்தார்.

Advertisement

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ப்ரோமோஷன் செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால் படம் வெளிவந்த பிறகு அத்தகைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகினர். இந்த சூழலில் வாரிசு திரைப்படம் இயல்பாகவே மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைய வேண்டும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பம் சார்ந்த கதைகளில் விஜய் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பதால் அவரை புதிய கோணத்தில் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில் இப்படத்தை வாங்குவதற்கு பலதரப்பில் இருந்து போட்டிகள் நிலவிவந்தன. இதற்கு மத்தியில் அமேசான் பிரைம் நிறுவனம் ஒடிடி உரிமத்தை சுமார் 100 கோடி ரூபாய் கொடுத்து பெற்றிருக்கிறது. ஹிந்தி டப்பிங் 40 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. மேலும் சாட்டிலைட் உரிமம் சுமார் 65 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் ரிலீசுக்கு முன்பாகவே சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகியுள்ளதால் தயாரிப்பாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே அதற்கு செலவு செய்யப்பட்ட பணத்தை எடுத்து விட்டனர்.

Advertisement

நடிகர் விஜய்யின் பிறந்த தினமான ஜூன் 22 ஆம் தேதி இந்த வாரிசு படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆக்கப்பட்டது. சென்ற படம் அதிக பிரமோஷன் செய்து பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி, அதை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆகையால் இந்த திரைப்படத்தை புரமோஷன் அளவில் கவனம் செலுத்தாமல் இயல்பான அளவிலேயே மக்களிடம் கொண்டு சென்று நல்ல வரவேற்பை பெறுவதற்கு படக்குழுவினர் கவனம் செலுத்துவதாகவும் தெரிகிறது.

வாரிசு திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று பட குழுவினர் ஏற்கனவே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top