சினிமா

தனுஷின் வாழ்நாள் அதிகபட்ச கலெக்ஷன் வாத்தி திரைப்படம் தான்.. ! எத்தனை கோடிகள் தெரியுமா.. ?

Vaathi

தனுஷ், சம்யுக்தா மேனன், சமுத்திரகனி மற்றும் சிலர் நடித்த திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லுரி இயக்கிய இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் வெளியாகியது. முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராகிய ‘ வாத்தி ’ கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. மேலும் கிளைமாக்சில் எமோஷனல் கனெக்ட் பெற்றதால் மிகுந்த வரவேற்பை பெற்றது.

விமர்சன ரீதியாக பார்வையாளர்களிடம் நல்ல வார்த்தைகளைப் பெற்ற வாத்தி திரைப்படம் வசூல் ரீதியாகவும் அபாரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தெலுங்கு மார்கெட்டில் தனுஷின் இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட பாராட்டுகள் குவிந்தன. பொங்கலுக்கு வெளியான விஜய்யின் வாரிசு படத்தை விட வாத்தி திரைப்படமே தெலுங்குவில் நல்ல லாபத்தை ஈட்டியது.

Advertisement

வாத்தி கதைச்சுருக்கம்

தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்பால் அரசுப் பள்ளிகள் அவதிப்பட்டு வருகிறது. அதைக் சரி செய்ய தனியார் பள்ளிகளின் தலைவர் சமுத்திரகனி அவரது ஆசிரியர்களை வைத்து அரசாங்கத்திற்கு கடைமையாற்றுவதாக கூறி சுயநலமாக பணிபுரிகிறார். அவரது எதிர்ப்புகளை தாண்டி தனுஷ் தான் பணி புரிந்த சோழவரம் கிராம மாணவர்களை பொதுத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வ்வை பாஸ் செய்ய உதவுவதே கதை.

இந்த கதையில் இடையே தேவையான சென்டிமென்ட், காதல் காட்சிகள் மற்றும் பாடல்களை கூட்டி நல்ல கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாக்கியது படக்குழு. அதன் பலனாக 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது இப்படம். தயாரிப்பாளார் அதிகாரபூர்வமாக தெரிவித்த வசூல் இதுவரை 118 கோடி. இது தான் தனுஷின் அதிகபட்ச கலெக்ஷன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

வாத்தி திரைப்படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. வெளியாகி 1 மாதம் ஆனதால் ஒப்பந்தப்படி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மார்ச் 17ஆம் தேதி நெட்பிளிக்ஸில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிவிட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top