Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாவாத்தி ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு - தெலுங்கில் சாதனை

வாத்தி ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு – தெலுங்கில் சாதனை

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல கம்பேக்கை கொடுத்துள்ளது. வெங்கட் அல்லூரி என தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்து நடித்த தனுஷ் இந்த படத்தை தெலுங்கிலும் சார் என்ற தலைப்பில் ரிலீஸ் செய்தார். இதன் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை தெலுங்கில் அதிகப்படுத்த தனுஷ் முயற்சி எடுத்தார்.

இதற்காக நடிகர் தனுஷ் பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை ஹைதராபாத்தில் நடத்தினார். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. காரணம் தமிழ்நாட்டை விட தெலுங்கில் தான் வாத்தி திரைப்படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. திரையரங்கில் இருந்து லாபம் மட்டும் 20 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இதன் மூலம் சங்கர் படம் அல்லாத அதிக வசூலை ஈட்டிய தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை வாத்தி பெற்றிருக்கிறது. தெலுங்கில் டூ பாயிண்ட் ஓ, எந்திரன், ஐ க்கு பிறகு அதிக வசூலை பெற்ற தமிழ் படம் என்று பெருமையை வாத்தி பெற்றிருக்கிறது. எனினும் தமிழ்நாட்டில் வாத்தி எதிர்பார்த்த அளவை வசூல் பெறவில்லை.

- Advertisement -

தனுஷின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் வசூலை வாத்தி தாண்டவில்லை. இந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய வாத்தி திரைப்படத்தின் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. தேர்வு காலம் என்பதால் பல்வேறு குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்கு செல்லவில்லை.

இதன் காரணமாக படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தார்கள். இந்த நிலையில் வாத்தி திரைப்படம் வரும் மார்ச் 17ஆம் தேதி நெட்லிபிளிக்சில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வாத்தி திரைப்படம் ஓடிடியிலும் பெரிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஏற்கனவே நெட்பிளிக்சில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை உலக அளவில் பெற்றது. இதே போன்று வாரிசு திரைப்படம் அமேசானில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த வரிசையில் தனுஷ் படம் இடம்பெறுமா என்று அவருடைய ரசிகர்கள் காத்துள்ளனர்.

Most Popular