Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாஎன்னது வடசென்னை 2 ரத்தா.. காரணம் இதுதான்.. வெற்றிமாறன் குழுவில் இருந்து தகவல்.. !

என்னது வடசென்னை 2 ரத்தா.. காரணம் இதுதான்.. வெற்றிமாறன் குழுவில் இருந்து தகவல்.. !

இயக்குனர் வெற்றிமாறனின் கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் திரைப்படம் வடசென்னை. இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவிலேயே மிகச் சிறந்த கேங்ஸ்டர் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தகு நேரியல் அல்லாத ஸ்க்ரீன்ப்ளேவை விறுவிறுப்பாக எடுத்துச் செல்வது சாமான்யமான காரியம் அல்ல.

- Advertisement -

ராஜன், அன்பு, செந்தில், குணா, வேலு, தம்பி, சந்திரா ஆகிய முக்கிய கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் இருந்து அழியாதவை. இந்தத் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பார்ட் 2 எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே வருகின்றனர். மீம் கிரியேட்டர்களும் இதனை ட்ரெண்ட் ஆகச் செட் செய்தனர்.

இது குறித்து தனுஷ், வெற்றிமாறன் இருவரும் மேடையில் பேசினர். விடுதலை முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிச்சயம் வட சென்னை 2, வாடிவாசல் நடக்கும் என ரசிகர்களுக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்தார். அவரது பேச்சின் மூலம் வெளியாவதற்கு 2027 ஆகும் எனத் தெரிந்தது. இருப்பினும் வடசென்னை 2 இருப்பதை அவர் உறுதி செய்ததே பெரிய சந்தோசம்.

- Advertisement -

வடசென்னை 2 படத்தில் பெரிய தல கதாபாத்திரம் என்றால் அது ராஜன் தான். அவரின் பேச்சைத் தான் ஊரே கேட்கும். இயக்குனர் அமீர் இதில் நடித்திருந்தார். அவரை வைத்து ‘ ராஜன் வகையறா ’ என ஓர் தனி சீரிஸே செய்ய வெற்றிமாறன் திட்டமிட்டிருந்ததாக கூறினார். ராஜன் வகையறா என்ற தலைப்பில் ஏற்கனவே வெற்றிமாறன் ஒரு மணி நேரப் படத்தை இயக்கி வைத்திருப்பதாக இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

வடசென்னை 2 லேட்டஸ்ட் அப்டேட்

தற்போது கிடைத்துள்ள தகவல் ஒட்டுமொத்த வடசென்னை 2 ரசிகர்களையும் வருத்தத்திற்கு தள்ளியுள்ளது. அதாவது இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தை இனி இயக்க வாய்ப்பே இல்லையாம். முதல் படத்தின் அளவிற்கு இதனை இயக்க தேவையானவை அவருக்கு கிடைக்கவில்லை என்கின்றனர். வெற்றிமாறன் எதிலும் முழுமை எதிர்பார்ப்பவர். முதல் பார்ட்டின் போதே அவருக்கு அரசியல் ரீதியாகவும் சிக்கல்கள் வந்தன. அதனால் வடசென்னை 2 நடப்பது கடினமே. ரசிகர்கள் வாடிவாசலை எதிர்பார்க்கலாம். தற்போது வெற்றிமாறன் விடுதலை 2 படத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

Most Popular