வைக்கம் விஜயலட்சுமி தமிழ் சினிமாவின் பிரபல பாடகிகளில் ஒருவராக இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் நிறைய திரைப்பட பாடல்கள் பாடியிருக்கிறார்.
இவருடைய இயற்பெயர் விஜயலட்சுமி. வைக்கம் என்பது இவர் பிறந்த ஊரின் பெயர் ஆகும் .இது கேரளாவில் உள்ள கோட்டயம் என்ற மாவட்டத்தில் உள்ளது. இவர் ஒரு பார்வையற்ற பெண் ஆவார். இவருடைய பாடல் திறமையால் இந்த குறை ஒருபோதும் அவரிடம் பெரிதாக யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.
குக்கூ திரைப்படத்தில் கோடையிலே என்று பாடலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். வைக்கம் விஜயலட்சுமியை பிரபலப்படுத்தியது விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி திரைப்படத்தின் சொப்பன சுந்தரி என்ற பாடல் ஆகும். இந்தப் பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை கேட்டு ரசித்ததற்கு பெரிய காரணம் வைக்கம் விஜயலட்சுமி குரல் தான் பல பாடகிகளை ஒப்பிடுகையில் வைக்கம் விஜயலட்சுமி உடைய குரலில் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கும் .
இப்படி சினிமாவில் சாதித்து வரும் வைக்கம் விஜயலட்சுமிக்கு சொந்த வாழ்வில் நிறைய பிரச்சனைகள் இருந்தது.ஆரம்பத்தில் விஜயலட்சுமிக்கு பகிரினில் உள்ள ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அவரும் வைக்கம் விஜயலட்சுமி பார்வை குறைபாட்டை சுட்டிக்காட்டியதோடு மேலே நிகழ்ச்சிகள் ஏதேனும் கலந்து கொள்ள கூடாது என்றும் கட்டளை இட்டு இருக்கிறார்.
இதை கேட்ட வைக்கம் விஜயலட்சுமி அந்த திருமணத்தையே வேண்டாம் என்று முடிவு செய்து விலகிவிட்டார். இதை பாராட்டி பலரும் விமர்சித்து வந்தார்கள். அதற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டுஅனுப் என்னும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் டை திருமணம் செய்து கொண்டார்.அதற்குப் பிறகு அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
தற்பொழுது youtube பேட்டி ஒன்றில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி விவாகரத்துக்கு பிறகு தான் நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும் எனக்கு பார்வை கிடைத்தால் நான் என் தாய் தந்தையை முதலில் பார்க்க விரும்புகிறேன்.
பார்வை இல்லாவிட்டாலும் பெண்ணுக்கு என்று சில ஆசைகள் இருக்குமே அதே போல் தான் வைக்கும் விஜயலட்சுமிக்கு பூ புடவை மாலை போன்றவற்றை பார்க்க வேண்டும் என்ற சின்ன சின்ன ஆசைகள் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
இந்தக் குறையுமே இல்லாதவர்கள் கூட வீணாக கடவுளை திட்டி வருகிறார்கள். ஆனால் வைக்கம் விஜயலட்சுமிக்கு பார்வை கிடைத்தால் அந்த கடவுளையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.