Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமாபொங்கல் வின்னர் வாரிசு! 7 நாட்களில் செய்த சாதனை.. தயாரிப்பாளர் அறிவிப்பு.. மாநில வாரிய வசூல்...

பொங்கல் வின்னர் வாரிசு! 7 நாட்களில் செய்த சாதனை.. தயாரிப்பாளர் அறிவிப்பு.. மாநில வாரிய வசூல் விவரம்

- Advertisement -

தமிழ் சினிமாவின் டாப் 2 நட்சத்திரங்களான விஜயும் அஜித்தும்பொங்களை முன்னிட்டு தங்களது திரைப்படங்களை ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் செய்தனர். இதில் யார் அதிக வசூலை பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடையும் ஏற்பட்டது. குறிப்பாக தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் என்று கூறியதால் அஜித் ரசிகர்கள் கடுப்பாகினர். தில்ராஜ் கூறியது உண்மை இல்லை என்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு யார் நம்பர் ஒன் என்று தெரிந்துவிடும் என்றும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் வாரிசு, துணிவு என இரண்டு படமே ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. பொங்கல் விடுமுறை ஒட்டி இரண்டு திரைப்படங்களும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடின. மேலும் வாரிசு குடும்ப படம் என்பதால் பல்வேறு குடும்ப ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.இதே போன்று வாரிசு தெலுங்கு மற்றும் ஹிந்தி டப்பிங் படமும் எதிர்பாராத அளவிற்கு நல்ல வசூலை கொடுத்தது. இதேபோன்று வெளிநாட்டுகளிலும் வாரிசு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

இதன் காரணமாக வாரிசு படத்தின் வசூல் கிடுகிடுவென உயர்ந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வாரிசு திரைப்படம் 7 நாட்களில் 210 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளது. துணிவு திரைப்படம் தற்போது வரை 160 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையில் முந்தி இருப்பது தெரியவந்துள்ளது.

- Advertisement -

தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் வாரிசு ஈட்டி இருக்கிறது. கேரளா, ஹிந்தி மார்க்கெட் ஆகியவற்றில் 10 கோடி ரூபாய்க்கு மேலாகவும், கர்நாடகாவில் 15 கோடி ரூபாயாகவும் ஆந்திரா தெலுங்கானாவில் 20 கோடி ரூபாய்க்கு மேலாகவும் வசூல் செய்திருக்கிறது. வெளிநாட்டில் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதால் மொத்தமாக சேர்த்து 210 கோடி ரூபாய்க்கு மேல் வாரிசு படம் வசூல் சாதனை படைத்திருக்கிறது.

இதன் மூலம் ஆறு படங்கள் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுகிறார். இந்தியாவில் அமீர்கான், ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோருக்கு பிறகு இந்த சாதனை படைக்கும் நடிகராக விஜய் கருதப்படுகிறார்.

Most Popular