விஜய் திரைப்படங்களிலேயே மிகவும் குறைந்த எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் என்றால் அது வாரிசு தான். படத்தின் டிரைலர் கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரஞ்சிதமே பாடல் மட்டும் தான் படத்தின் ஒரே பிளஸ் பாயிண்டாக அமைந்திருந்தது. ஆனால் படம் வெளியாகி அனைத்து ரசிகர்களுக்கும் பெரும் திருப்தியை வாரிசு கொடுத்தது.
மேலும் விஜய்யின் பலமாக கருதப்படும் குடும்ப ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வந்ததால் படத்தின் வசூல் அதிகரித்தது. மேலும் முதலில் குறைந்த அளவை திரையரங்குகள் கிடைத்தாலும், பிறகு வாரிசுக்கு கிடைத்த எதிர்பார்ப்பை வைத்து திரையரங்குகளும் அதிகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் பல்வேறு வசூல் சாதனை குவித்த நிலையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி 5 தமிழ் படங்கள் ரிலீசானது.
மைக்கேல், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்கள் ரசிகன் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் நான்காவது வாரத்திலும் வசூலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. பல்வேறு திரையரங்குகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாரிசு திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக நான்காவது வாரம் இறுதியில் வாரிசு திரைப்படம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் வாரிசு 143 கோடியே 75 லட்சம் ரூபாய் வசூல் சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் விஜயின் முந்தைய படங்களான பிகில் ,மாஸ்டர் ஆகிய வசூலை வாரிசு முறியடித்து இருக்கிறது.
தற்போது உள்ள நிலவரப்படி வாரிசு தமிழகத்தில் பொன்னியின் செல்வன், விக்ரம், பாகுபலி 2 க்கு பிறகு நான்காவது இடத்தில் இருக்கிறது. தற்போது தமிழகத்தில் அடுத்த பெரிய படமான தனுஷின் வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதுவரை வாரிசு திரைப்பட ஓடும் என்பதால் மேலும் 4 கோடி தமிழகத்தில் வசூல் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகுபலி 2 இன் சாதனையை முறியடித்து வாரிசு தமிழக திரைப்பட வசூல் வரலாற்றில் மூன்றாவது இடத்தில் பிடிக்கும்.